மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியை சார்ந்தவர் நீலகண்டன் மகன் விஜயன் (58). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். தற்போது இவர் குழித்துறை பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அடிக்கடி மது குடிப்பதால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை நடப்பது வழக்கம். இதனால் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.
இதில் மனம் உடைந்த விஜயன் கடந்த 21-ம் தேதி விஷம் குடித்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் விஜயனை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விஜயன் நேற்று உயிரிழந்துள்ளார். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.