கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டாறு ரயில்வே ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் படத்தை வைத்த தமிழ்நாடு பாஜக மாநில மகளிர் அணி தலைவி உமா ரதி, மாநகராட்சி கவுன்சிலர் சுனில் குமார், பாஜக வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த ராணி, பொதுச் செயலாளர் ராஜேஷ் ஆகியோர் மீது கோட்டாறு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நேற்று கடை விற்பனையாளர் நாராயணன் கொடுத்த புகாரின்பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
            













