மணவாளக்குறிச்சி: ஆற்றில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி

0
297

மணவாளக்குறிச்சி அருகே உள்ள சின்னவிளை பகுதியைச் சேர்ந்தவர் கிளிநோஸ் மகன் பனிஅடிமை (36). மீன்பிடித் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று அந்தப் பகுதியில் உள்ள வள்ளி ஆற்றின் படித்துறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் பனிஅடிமையை மீட்டு சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பலனில்லாமல் பனியடிமை நேற்று இரவு இறந்தார். இதுகுறித்து அவருடைய அண்ணன் சகாய செல்வராஜ் என்பவர் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here