மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதி வட்ட விளையை சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி கீதாதேவி. இவர் நேற்று (மார்ச் 14) தேவையான பொருட்கள் வாங்க பஸ்சில் மார்த்தாண்டம் சென்றார். அப்போது பஸ்சில் இருந்த இரண்டு பெண்கள் கீதாதேவியின் பர்சை திருடியுள்ளனர்.
இதை கண்ட சக பயணிகள் கூச்சலிட்டனர். உடனடியாக இரண்டு பெண்களையும் பிடித்து மார்த்தாண்டம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் பிடிபட்ட இருவரும் தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்த அஞ்சலி, பவானி என தெரிய வந்தது. போலீசாரிடம் பர்ஸ் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து தக்கலை பெண்கள் சிறையில் அடைத்தனர்.














