கார் விபத்தில் மீண்டும் சிக்கிய அஜித்

0
326

நடிகர் அஜித்குமார், கார் ரேஸில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார் ரேஸில் அவருடைய அணி பங்கேற்றது. அதற்கு முன்பாக நடந்த பயிற்சியில் அஜித்குமார் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இதையடுத்து போட்டியில் இருந்து அவர் விலகினார். அவருடைய அணி பங்கேற்று 3-ம் இடத்தைப் பிடித்தது.

தற்போது ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் கார் ரேஸில் அவர் பங்கேற்றுள்ளார். அங்குள்ள வெலன்சியா நகரில் நேற்று முன் தினம் நடந்த கார் ரேஸில் அஜித்குமார் தனக்கு முன்னால் சென்ற மற்றொரு காரை முந்துவதற்கு முயன்றபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பினார்.

இந்நிலையில் அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளாகும் போது அவரது காரில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “அஜித்தின் விடாமுயற்சி வலிமை மிக்கது. எந்த வித காயமும் இன்றி வெளியே வந்தார். ரேஸில் அவர் மீண்டும் பங்கேற்பார்” என்று தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here