புதுக்கடை: கடன் தொல்லையால் பெண் விஷம் குடித்து தற்கொலை

0
369

புதுக்கடை வடக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன். பெயின்டிங் தொழிலாளி. இவரது மனைவி சுதா (44). இவர்களுக்கு 11 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் புதிதாக வீடு கட்டியதில் கடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

இதனால் சுதா மனவருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் ஏதோ விஷமருந்து குடித்த சுதா ஆபத்தான நிலையில் காணப்பட்டார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி செய்து விட்டு, திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (17-ம் தேதி) காலை உயிரிழந்தார். இது தொடர்பாக தங்கப்பன் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here