திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் நோக்கி நேற்று (டிசம்பர் 10) இரவு கேரளா அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்த ஷாஜி (48) என்பவர் பஸ்சை ஓட்டினார். சாமியார் மடம் பகுதியில் பஸ் செல்லும்போது சாலையோரம் நின்ற அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் திடீரென பஸ் மீது கல் வீசினார். இதில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. டிரைவர் ஷாஜி பஸ்ஸை நிறுத்தும் முன் கல் வீசியவர் ஓடிவிட்டார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து பஸ் டிரைவர் ஷாஜி தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.














