ராஜாக்கமங்கலம்: கணவர் கண்முன் மனைவிக்கு பிளையிங் கிஸ் -கைது

0
236

ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் பகுதி சேர்ந்தவர் லட்சுமணன் (48). தொழிலாளி. இவர் தெக்குறிச்சி பகுதியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் ஒருவரின் மனைவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

 சம்பவ தினம் அந்தப் பகுதிக்கு சென்ற லட்சுமணன், கண்டக்டர் வீட்டில் இருக்கும்போதே அவரது மனைவியை பார்த்து ஐ லவ் யூ என்று கூறியதுடன் பிளையிங் கிஸ் கொடுத்துள்ளார். இதை கண்ட கண்டக்டர் கண்டித்துள்ளார். அப்போது அவரை லட்சுமணன் மிரட்டி உள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
       பின்னர் சம்பந்தப்பட்ட கண்டக்டர் இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, லட்சுமணன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here