Home தேசிய செய்திகள் மம்தாவின் கூட்டத்தை புறக்கணித்த 60 திரிணமூல் எம்எல்ஏக்கள்

மம்தாவின் கூட்டத்தை புறக்கணித்த 60 திரிணமூல் எம்எல்ஏக்கள்

0

திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வர் மம்தா பானர்ஜி தலை​மை​யில் நேற்று நடந்த கூட்​டத்தை அந்த கட்​சி​யின் 60 எம்எல்​ஏக்​கள் புறக்​கணித்​தனர்.

மேற்​கு ​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்​துள்​ளது. திரிண​மூல் காங்​கிரஸுக்கு 80 இடங்​கள் மட்​டுமே கிடைத்​தன. இந்த சூழலில் திரிண​மூல் எம்பிக்கள் அபிஷேக் பானர்​ஜி, கல்​யாண் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்​பாக கட்சி எம்​எல்​ஏக்​கள் கூட்டத்துக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்​தார்.

இதன்​படி கொல்​கத்​தா​வில் உள்ள மம்​தா​வின் வீட்​டில் நேற்று மாலை 3 மணிக்கு எம்​எல்​ஏக்​கள் கூட்​டம் நடை​பெற்​றது. மொத்தமுள்ள 80 திரிண​மூல் எம்​எல்​ஏக்​களில் 60 எம்​எல்​ஏக்​கள் கூட்​டத்​தில் பங்​கேற்​க​வில்​லை. மம்தா உட்பட 20 பேர் மட்​டுமே கூட்​டத்​தில் கலந்து கொண்​டனர். இதைத் தொடர்ந்து கூட்​டம் ஒத்திவைக்கப்படு​வ​தாக மம்தா தெரி​வித்​தார்.

தேர்​தலுக்கு பிந்​தைய வன்​முறை​களைக் கண்​டித்து திரிண​மூல் சார்​பில் கடந்த மாதம் 20ம் தேதி கொல்​கத்​தா​வில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. இதில் கட்சி எம்​எல்​ஏக்​கள் அனை​வரும் பங்​கேற்க வேண்​டும் என்று மம்தா உத்​தர​விட்டு இருந்​தார். ஆனால் 35 எம்எல்​ஏக்​கள் மட்​டுமே ஆர்ப்​பாட்​டத்​தில் பங்​கேற்​றனர்.

இதுதொடர்​பாக அரசி​யல் நோக்​கர்​கள் கூறிய​தாவது: தேர்​தல் தோல்விக்​குப் பிறகு திரிண​மூல் தலை​வர்​கள் பலர் பாஜக​வுக்கு மாறி வரு​கின்​றனர். சிலர் தீவிர அரசி​யலில் இருந்து ஓய்வு பெறு​வ​தாக அறி​வித்து வரு​கின்​றனர். முறை​கேடு​கள் காரண​மாக மேற்​கு​வங்​கத்​தின் ஃபால்டா தொகு​தி​யில் கடந்த மாதம் 29ம் தேதி மறு​வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது.

இந்த தொகு​தி​யில் திரிண​மூல் வேட்​பாள​ராக போட்​டி​யிட்ட ஜஹாங்​கீர் கான் கடைசி நேரத்​தில் தேர்​தல் போட்​டி​யில் இருந்து வில​கு​வ​தாக அறி​வித்​தார். இதே​போல ஏராள​மான திரிண​மூல் தலை​வர்​கள் கட்சி நடவடிக்​கை​களில் இருந்து விலகி வருகின்றனர். புதிய முதல்​வர் சுவேந்து அதி​காரிக்கு சில திரிணமூல் எம்​எல்​ஏக்​கள் பகிரங்​க​மாகவே ஆதரவு தெரி​வித்து உள்​ளனர்.

தற்​போது மம்தா தலை​மை​யில் நடை​பெற்ற கூட்​டத்தை 60 எம்எல்ஏக்​கள் புறக்​கணித்​திருப்​பது திரிண​மூல் கட்​சிக்கு பெரும் பின்னடை​வாக அமைந்​துள்​ளது. திரிண​மூல் எம்பி ககோலி கோஷ் அண்​மை​யில் கட்​சி​யின் அனைத்து பொறுப்​பு​களில் இருந்​தும் விலகி​னார். முதல்​வர் சுவேந்து அதி​காரி​யுடன் அவர் நெருக்​க​மாக உள்​ளார். தற்​போதைய சூழலில் திரிண​மூல் காங்​கிரஸுக்கு 28 மக்​களவை எம்​பிக்​கள், 13 மாநிலங்​களவை எம்​பிக்​கள் உள்​ளனர். இதில் 20 எம்​பிக்​கள் பாஜக​வுடன் தொடர்​பில் இருப்​ப​தாக தகவல்கள் வெளி​யாகி உள்​ளன. இவ்​வாறு அவர்​கள்​ தெரிவித்தனர்​.

2 திரிணமூல் எம்எல்ஏக்கள் நீக்கம்: திரிண​மூல் காங்​கிரஸ் சட்டப்பேர​வைத் தலை​வ​ராக சோபன்​தேவ் சட்​டோ​பாத்யா தேர்வு செய்​யப்​பட்டார். அவரை எதிர்க்​கட்சித் தலை​வ​ராக நியமிக்க கடந்த மே 19ம் தேதி சட்​டப்​பேரவை செயலரிடம் கடிதம் அளிக்கப்பட்​டது. அதில் திரிண​மூல் எம்​எல்​ஏக்​கள் கையெழுத்திட்டு இருந்​தனர்.

இதனிடையே அந்தக் கட்​சி​யின் எம்​எல்​ஏக்​கள் சந்​தீபன் சகா, ரீதாப்​ரதா பந்​தோ​பாத்​யாய் ஆகியோர் தங்​களது கையொப்பங்கள் போலி​யாகப் போடப்​பட்டு உள்ளதாக பேர​வைத் தலை​வர் ரதீந்​திர​தாத் பாஸு​விடம் முறை​யிட்​டனர். இது குறித்து உயர்நிலை விசா​ரணை நடத்த பேர​வைத் தலை​வர் உத்​தர​விட்டு உள்ளார்.

இந்த சூழலில் திரிண​மூல் எம்​எல்​ஏக்​கள் சந்​தீபன் சகா, ரீதாப்​ரதா பந்​தோ​பாத்​யாய் ஆகியோர் கட்​சி​யில் இருந்து நீக்​கப்​பட்டு உள்ளனர். கட்​சி​ விரோத நடவடிக்கை காரண​மாக இரு​வரும் அடிப்​படை உறுப்​பினர் உட்பட அனைத்து பொறுப்​பு​களில் இருந்தும் நீக்​கப்​பட்டிருப்​ப​தாக திரிண​மூல் துணைத் தலை​வர் சந்திரிமா பட்​டாச்​சார்யா அறி​வித்​துள்​ளார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version