Home தேசிய செய்திகள் ஹார்​முஸ் வழி​யாக செல்லும் கப்​பல்​களில் இந்திய மாலுமிகளை நியமிப்​பதை தவிர்க்க கப்பல் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

ஹார்​முஸ் வழி​யாக செல்லும் கப்​பல்​களில் இந்திய மாலுமிகளை நியமிப்​பதை தவிர்க்க கப்பல் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

0

அமெரிக்கா​வும் ஈரானும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பரஸ்​பரம் தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. இதில் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் ‘எம்டி அல் பாஹி​யா’, ‘எம்டி மொம்​பா​சா’ ஆகிய 2 கப்​பல்​கள் மீது கடந்த சில தினங்​களுக்கு முன்பு தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இந்த இரு கப்​பல்​களி​லும் இருந்த 46 பணி​யாளர்​களில் 30 பேர் இந்​திய மாலுமிகள் ஆவர். அவர்களில் ஒருவர் உயி​ரிழந்​தார், மற்​றொரு​வர் காயமடைந்​தார்.

இந்​நிலை​யில், கடல்​சார் நிர்​வாக பொது இயக்​குநரகம் (டிஜிஎம்ஏ) வெளி​யிட்​டுள்ள அறிவிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மறு உத்தரவு வரும் வரை, ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாகச் செல்​லும் கப்பல்​களில் இந்​திய மாலுமிகளை பணி​யமர்த்​து​வதைத் தவிர்க்கு​மாறு கப்​பல் உரிமை​யாளர்​கள், கப்​பல் மேலா​ளர்​கள் மற்றும் மாலுமி வேலை​வாய்ப்பு உரிமம் பெற்ற (ஆர்​பிஎஸ்​எல்) நிறு​வனங்​கள் அறி​வுறுத்​தப்​படு​கிறார்​கள்.

த​விர, தகு​தி ​வாய்ந்த அதி​காரி​களால் வெளி​யிடப்​படும் வழி​ செலுத்​தல் எச்​சரிக்​கைகள், பாது​காப்பு ஆலோ​சனை​கள் மற்​றும் அறி​விப்​பு​களைக் கண்​காணிக்க வேண்​டும். சர்​வ​தேச கப்​பல் மற்றும் துறை​முக பாது​காப்பு விதி​களின்​படி தேவை​யான அனைத்து பாது​காப்பு நடவடிக்​கைகளை​யும் செயல்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version