Home தேசிய செய்திகள் வீட்டுப்பாடம் செய்யாததற்காக ஆசிரியை அடித்ததில் 6 வயது சிறுவன் உயிரிழப்பு

வீட்டுப்பாடம் செய்யாததற்காக ஆசிரியை அடித்ததில் 6 வயது சிறுவன் உயிரிழப்பு

0

வி​சாகப்​பட்​டினத்​தில் உள்ள ‘லிட்​டில் கார்​டன்’ தனி​யார் பள்​ளி​யில், வீட்டுப்பாடம் செய்​யாததற்​காக ஆசிரியை அடித்​த​தில், 6 வயது சிறுவன் பிரணய் தேஜா வகுப்​பறை​யிலேயே மயங்கி விழுந்து உயி​ரிழந்த சம்​பவம் பெரும் அதிர்ச்​சியை ஏற்படுத்​தி​யுள்​ளது.

நேற்று முன்​தினம் காலை ஆரோக்​கிய​மாகப் பள்​ளிக்​குச் சென்ற பிரணய், வீட்​டுப்​பாடம் செய்​யாத​தால் ஆசிரியை​யால் கண்டிக்கப்​பட்டு அடிக்​கப்​பட்​டார். பயத்​தி​லும் அதிர்ச்​சி​யிலும் கதறி அழுத சிறு​வன், ஆசிரியை​யின் மடி​யிலேயே குப்​புற மயங்கி விழுந்த காட்​சிகள் சிசிடி​வி​யில் பதி​வாகி இணை​யத்​தில் வெளியாகின.

உடனடி​யாக கிங் ஜார்ஜ் மருத்​து​வ​மனைக்​குக் கொண்டு செல்​லப்​பட்​ட​போது, அவர் ஏற்​க​னவே உயி​ரிழந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர். பயத்​தால் ஏற்​பட்ட மாரடைப்பு அல்​லது அதிர்ச்சியே உயி​ரிழப்​புக்​குக் காரண​மாக இருக்​கலாம் எனக் கூறப்​படும் நிலை​யில், உடற்​கூ​ராய்வு அறிக்கை வந்த பிறகே உண்​மை​யான காரணம் தெரிய​வரும்.

இச்​சம்​பவத்​தால் அதிர்ச்​சியடைந்த பெற்​றோரும் உறவினர்​களும், பள்ளி நிர்​வாகம் மற்​றும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். காவல்​துறை​யினர் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். ஆந்​திரப் பள்​ளிக் கல்​வித்​துறை கடும் வருத்தம் தெரி​வித்​து, 3 பேர் கொண்ட சிறப்​புக் குழு​வை அமைத்துள்​ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version