Home தேசிய செய்திகள் ஒரு நபருக்கு 9 சிம்கார்டு மட்டுமே: மத்திய அரசு உத்தரவு

ஒரு நபருக்கு 9 சிம்கார்டு மட்டுமே: மத்திய அரசு உத்தரவு

0

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆகஸ்ட் 24 முதல், நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி புதிய சிம்கார்டு பெற முயலும் ஒவ்வொரு சந்தாதாரரையும் அடையாளம் காணும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட வரம்பை எட்டிய வாடிக்கையாளர்களின் புகைப்படத்துடன் கூடிய விவரங்கள் மத்திய அரசின் டிஜிட்டல் புலனாய்வு தளத்தில் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் காட்சிப்படுத்தப்படும்.

ஏற்கனவே 9 சிம்கார்டுகளை வைத்திருக்கும் ஒருவர் புதியதாக ஒரு சிம்கார்டு கேட்டு விண்ணப்பித்தால், அவருக்கு சிம்கார்டு வழங்கக்கூடாது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்ப மாற்றங்களை முழுமையாக நடைமுறைப் படுத்த நவம்பர் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version