Home தேசிய செய்திகள் மதிய உணவில் உப்புக்கு பதில் சலவைத் தூள்: பிஹாரில் 36 மாணவிகளுக்கு சிகிச்சை

மதிய உணவில் உப்புக்கு பதில் சலவைத் தூள்: பிஹாரில் 36 மாணவிகளுக்கு சிகிச்சை

0

பிஹார் மாநில அரசுப் பள்​ளி​யில் மதிய உணவில் உப்புக்கு பதில் சலவைத் தூள் கலக்​கப்​பட்​ட​தால், அதைச் சாப்பிட்ட 36 மாணவி​களுக்கு வாந்​தி, மயக்​கம் ஏற்​பட்டு மருத்துவமனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

பிஹார் மாநிலம் நாளந்தா மாவட்ட அரசு நடுநிலைப் பள்​ளி​யில் கடந்த செவ்​வாய்க்​கிழமை தன்​னார்வ தொண்டு நிறு​வனம் ஒன்று வழங்​கிய மதிய உணவில், உப்​புக்​குப் பதில் சமையல்​காரர் தவறு தலாகச் சலவைத் தூள் கலந்​து​விட்​டார். இந்த சோயாபீன் சாதத்தை சாப்​பிட்ட 36 மாணவி​களுக்​குத் தலைசுற்​றலும், வாந்தியும் ஏற்​பட்​டது. பாதிக்​கப்​பட்ட மாணவி​கள் அனை​வரும் பிஹார் ஷரீப் சர்​தார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

உணவில் உப்பு இல்லை என்று மாணவி​கள் புகாரளித்த நிலையில், ஒரே இடத்​தில் வைக்​கப்​பட்​டிருந்த உப்​பு, சலவைத் தூள் டப்​பாக்​களால் குழப்​பம் ஏற்​பட்டு இத்​தவறு நடந்​துள்​ளது.

தற்​போது குழந்​தைகள் அனை​வரும் ஆபத்​தான கட்​டத்​தைத் தாண்டி நலமாக இருப்​ப​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர். மேலும், மதிய உணவு தயாரிப்பு மற்​றும் விநி​யோகத்​தில் ஏற்​பட்ட இந்த தீவிர அலட்​சி​யப் போக்கு குறித்து விரி​வான வி​சா​ரணை நடத்​தப்​படும்​ என்​றும்​ அமைச்​சர்​ தெரி​வித்​துள்​ளார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version