மணிப்பூரில் தடை செய்யப்பட்ட கங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி தைபாங்க்நங்க்பா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் உள்பட 46 பேர், நேற்று ஆயுதங்களுடன் மணிப்பூர் அரசிடம் சரணடைந்தனர்.
இம்பாலில் உள்ள 1-வது மணிப்பூர் ரைஃபிள்ஸ் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற ‘வீடு திரும்புதல்’ நிகழ்ச்சியில், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் 20 ஆயுதங்கள், 216 தோட்டாக்கள் மற்றும் 3 வெடிபொருள்களை அரசிடம் ஒப்படைத்தனர்.
சரணடைந்தவர்களை வரவேற்ற முதல்வர் யும்னம் கெம்சந்த், “மீதமுள்ள போராளிகளும் ஆயுதங்களை கைவிட்டு, ஜனநாயகத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். ஆயுதங்கள் மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தாது’’ என்றார்.
