பிஹார் வெள்ளத்தில் 50 லட்சம் பேர் பாதிப்பு: குடும்பத்துக்கு ரூ.15,000 வழங்க தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்

0
26

பிஹாரில் வெள்​ளத்​தால் சுமார் 50 லட்​சம் பேர் பாதிக்கப்​பட்​டுள்ள நிலை​யில், ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்​டும் என மாநில அரசை தேஜஸ்வி யாதவ் வலி​யுறுத்தி உள்​ளார்.

பிஹார் மாநிலம் மிக​வும் மோச​மான வெள்​ளப் பாதிப்பை எதிர்​கொண்​டுள்​ளது. தொடர் கனமழை​யின் காரண​மாக கங்கை உள்ளிட்ட முக்​கிய நதி​களில் வெள்​ளம் கரைபுரண்டு ஓடு​கிறது. இதனால் தலைநகர் பாட்னா உட்பட 15 மாவட்​டங்​கள் வெள்ளத்தில் தத்​தளித்து வரு​கின்​றன.

வெள்​ளத்​தால் சுமார் 50 லட்​சம் பேர் பாதிக்​கப்​பட்​டுள்ள நிலையில், ராஷ்ட்​ரிய ஜனதாதள கட்​சி​யின் தேசிய செயல் தலை​வரும், பிஹார் சட்​டப்​பேரவை எதிர்க்​கட்சி தலை​வரு​மான தேஜஸ்வி யாதவ், பாட்​னா​வில் வெள்​ளம் பாதித்த பகு​தி​களை நேற்று ஆய்வு செய்​தார்.

அதன் பின்​னர் பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பில் அவர் பேசியதாவது: வெள்​ளத்​தில் மக்​கள் உயி​ரிழந்து வரு​கின்​றனர். இருந்​த போ​தி​லும், உணர்​வற்ற அரசாங்​கம் அவர்​களின் துயரத்தின் மீது அக்​கறை​யின்றி இருக்​கிறது. இந்த வெள்​ளப்​பெருக்கை உடனடி​யாக தேசி​யப் பேரிட​ராக அறிவிக்க வேண்டும். மேலும், பாதிக்​கப்​பட்ட ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் மாநில அரசு தலா ரூ.15 ஆயிரம் வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

கடந்த சில நாட்​களுக்கு முன்பு பிஹாரில் வெள்​ளப் பாதிப்​பு​களை ஆய்வு செய்த மத்​திய வேளாண் அமைச்​சர் சிவ​ராஜ் சிங் சவுஹான், வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட ஒவ்​வொரு குடும்பத்துக்கும் மத்​திய அரசு சார்​பில் ரூ.7,000 வழங்கப்பட்டுள்ளதாக தெரி​வித்​தது குறிப்​பிடத்​தக்​கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here