திருவள்ளூர் அருகே அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி, மயக்கம்

0
32

​திருவள்ளூர் மாவட்​டம், கடம்​பத்​தூர் அருகே உள்ள கொட்​டையூர் ஊராட்சி ஒன்​றிய நடுநிலைப் பள்​ளி​யில் 54 மாணவ, மாணவி​கள் படித்து வரு​கின்​றனர்.

இவர்​களுக்கு பெருந்​தலை​வர் காம​ராஜர் காலை உணவுத் திட்​டத்​தின்கீழ், நேற்று ரவா கிச்​சடி​யும், சாம்​பாரும் வழங்​கப்​பட்​டது. அதை சாப்​பிட்ட ஒரு மாண​வி​யின்தட்​டில் பல்லி இறந்​துகிடந்​தது. இதனால் மாணவ, மாணவி​கள் அதிர்ச்​சி​யடைந்​தனர்.

சிறிது நேரத்​தில் கிச்​சடி சாப்​பிட்ட மாணவ, மாணவி​கள் 40 பேருக்கு வாந்​தி, மயக்​கம் ஏற்​பட்​டது. இதையடுத்து அவர்​கள் 3 ஆம்​புலன்​ஸ்​கள் மூலம் சிகிச்​

சைக்​காக திரு​வள்​ளூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டனர்.

அங்கு முழு உணவை சாப்​பிட்ட 18 மாணவ, மாணவி​கள் உட்பட 40 பேருக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. இதில் 39 பேர் சிகிச்சை முடிந்து நேற்று மாலை வீடு திரும்​பினர். 5-ம் வகுப்பு மாண​வி​யான ஆதிலட்​சுமி (10) என்​பவர் மட்​டும் வயிற்​றுப் போக்கு உள்​ளிட்ட காரணங்​களால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரு​கிறார்.

தகலறிந்த திரு​வள்​ளூர் ஆட்​சி​யர் கவி​தா, திரு​வள்​ளூர் எம்​எல்ஏ அருண்​கு​மார் ஆகியோர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு நேரில் சென்று நலம் விசா​ரித்​தனர். தொடர்ந்து மருத்​து​வ​மனை, பள்​ளி​யில் இதுகுறித்து ஆட்​சி​யர் நேரில் விசா​ரணை, ஆய்​வில் ஈடு​பட்​டார்.

அப்​போது ஆட்​சி​யர் கவிதா கூறுகை​யில், “இச்​சம்​பவத்​துக்கு சமையலரின் கவனக்​குறைவு​தான் காரணம் என கண்​டறியப்​பட்​டுள்​ளது. சமைக்​கும்​போது மூடி சமைத்​திருந்​த​தால் இவ்​வாறு நடந்​திருக்​காது.

உணவைப் பரி​மாறும் முன் ஒரு​முறை பார்த்​திருந்​தால், மாணவ, மாணவி​கள் உணவு சாப்​பிடு​வதைத் தவிர்த்​திருக்க முடி​யும். இனி பள்​ளி​களில் உணவு சமைக்​கப்​படும்​போது, அதனை ஆசிரியர்​கள் கண்​காணிக்க அறி​வுறுத்​தப்​படும்” என்​றார்.

இச்சம்பவம் தொடர்பாக, அப்பள்ளியின் சமையல் பணியாளர்கள் ஆர்த்தி, தனலட்சுமி ஆகியோர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே செங்​கல்​பட்டு மாவட்​டம் மது​ராந்​தகம் அருகே மேலக்​கண்டை ஊராட்சி ஒன்​றிய நடுநிலைப் பள்​ளி​யில் நேற்று முன்​தினம் (செப்​.23) பல்லி விழுந்​துகிடந்த காலை உணவை உட்​கொண்ட 11 மாணவ, மாணவி​கள் பாதிக்​கப்​பட்ட நிலை​யில் இன்று திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் அதே​போல நடந்​துள்​ளது அனை​வரை​யும் அதிர்ச்​சி​யில் ஆழ்த்​தி​யுள்​ளது.

அடுத்​தடுத்து நிகழ்ந்​து​வரும் இது​போன்ற சம்​பவங்​களுக்​கு கண்​டனம்​ தெரி​வித்​த பாஜக மாநிலத்​ தலை​வர்​ நயி​னார்​ நாகேந்​திரன், அனைத்து அரசுப்

பள்ளிகளிலும் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு மாணவர்களுக்கு பாதுகாப்பான உணவு வழங்குவதை உறுதி செய்ய​ வேண்டும் என வலியுறுத்தினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here