Home 2024
Yearly Archives: 2024
மெல்பர்ன் டெஸ்டில் வலுவான நிலையில் ஆஸி. அணி: இந்தியாவுக்கு 340 ரன்கள் இலக்கு
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 339 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற 340 ரன்கள் என்ற இலக்கை இந்தியா விரட்டி வருகிறது.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் 4-வது டெஸ்ட்...
செஸ் சாம்பியன் ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு
உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற இந்த போட்டியில் கோனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இறுதிப்போட்டியில் இந்தோனேசியாவை சேர்ந்த ஐரீன் சுகந்தரை எதிர்கொண்டு விளையாடிய கோனேரு ஹம்பி 8.5 புள்ளிகள் பெற்று பட்டத்தைக் கைப்பற்றினார். உலக ரேபிட் செஸ் போட்டியில் ஹம்பி வெல்லும் 2-வது பட்டமாகும் இது.
இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது: 2-வது...
முன்னாள் தடகள வீரருக்கு தொழிலதிபர் பாராட்டு!
டிரைவராக பணிபுரியும் முன்னாள் தடகள வீரருக்கு மும்பை இளம் தொழிலதிபர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர்யன் சிங் குஷ்வா. இவர் ஒரு முறை ஓலா டாக்ஸியில் செல்லும்போது அந்த காரை ஓட்டிய டிரைவர் பராக் பாட்டீல் என்பவர் முன்னாள் தடகள வீரர் என்பது தெரியவந்தது. மேலும் இவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 2 தங்கம், 11 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து பராக் பாட்டீல் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ஆர்யன் சிங் குஷ்வா கூறியதாவது: எனது ஓலா...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தென் ஆப்பிரிக்க அணி தகுதி
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தென் ஆப்பிரிக்க அணி தகுதி பெற்றுள்ளது.
செஞ்சுரியனில் நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்க அணி முன்னேறியுள்ளது.
100 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் ‘பீஸ்ட் கேம்ஸ்’ டி.வி. தொடர் நிகழ்ச்சி – வெற்றி பெறும் நபருக்கு தீவு பரிசு
உலகிலேயே மிக அதிகமாக 100 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் நடத்தப்படும் ‘பீஸ்ட் கேம்ஸ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெறும் நபருக்கு 5 மில்லியன் டாலர் மெகா பரிசுடன் தனியார் தீவு ஒன்றும் பரிசளிக்கப்படுகிறது.
நெட்பிளிக்ஸில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ஸ்க்விட் கேம் டி.வி தொடர் 22 மில்லியன் டாலர் செலவில் நடத்தப்பட்டது. இதேபோல் கேம் ஆப் த்ரோன்ஸ் டி.வி நிகழ்ச்சிக்கு 50 மில்லியன் டாலர் செலவானது. ‘தி லாஸ்ட் ஆஃப் அஸ்’ என்ற நிகழ்ச்சிக்கு 90 மில்லியன் டாலர் செலவானது. தற்போது...
தென்கொரியாவில் விமானம் தீப்பிடித்து 179 பேர் பரிதாப உயிரிழப்பு: நடந்தது என்ன?
தென்கொரியாவின் முவான் நகரில் நேற்று நிகழ்ந்த விமான விபத்தில் பயணிகள், விமானிகள் உட்பட 179 பேர் உயிரிழந்தனர். விமானம் தீப்பிடித்து முழுமையாக எரிந்து நாசமானது. அதன் பின்பகுதியில் இருந்த 2 ஊழியர்கள் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
தென்கொரியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான ஜேஜு ஏர் கோ நிறுவனத்தின் போயிங் 737-800 ரக விமானம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று அதிகாலை தென்கொரியாவின் முவான் நகருக்கு புறப்பட்டது. விமானத்தில் 175 பயணிகள், விமானிகள் உட்பட 6 ஊழியர்கள் என மொத்தம் 181...
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் மறைந்தார்
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் மறைந்தார். அவருக்கு வயது 100. அவரது மறைவுக்கு அதிபர் பைடன் உள்பட உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினை பெற்றவர் ஜிம்மி கார்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயி டூ அமெரிக்க அதிபர்: 1977 முதல் 1981 வரை ஜிம்மி கார்டர் அமெரிக்க அதிபராக இருந்தார். அமெரிக்காவின் 39வது அதிபராக இவர் பதவி வகித்தார். விவசாய பின்னணி கொண்ட இவர் ஜாஅர்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர். அங்கு அவருக்கு...
எச்-1 பி விசா குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிய டொனால்ட் ட்ரம்ப்!
எச்-1 பி விசாவை நான் எப்போதும் ஆதரிக்கிறேன் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் 2016-ம் ஆண்டில், ட்ரம்ப் இந்தத் திட்டத்தை கடும் விமர்சனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ம் தேதி அவர் அதிபராக பதவியேற்க உள்ளார். அதன் பின்னர் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் பிரச்சினைகள் வெடிக்கலாம் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே அவர் தனது ஆட்சியில் குடியேற்றம் தொடர்பாக கடும்...
மகா கும்பமேளாவில் 2,000 டிரோன்களில் வானில் வண்ண மயமான லேசர் கண்காட்சி
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் அடுத்த மாதம் ஜனவரி 13-ம் தேதி முதல் பிப்ரவரி 26-ம் தேதி வரை மகா கும்பமேளா நடைபெறுகிறது. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது.
கும்பமேளாவின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சியின் போது, சங்கம் முனைப் பகுதியில் இரவு நேரத்தில் ட்ரோன்கள் மூலம் லேசர் கண்காட்சிக்கு உத்தர பிரதேச சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அபரஜிதா சிங் கூறியதாவது: மூன்று நதிகள் சங்கமிக்கும் சங்கம் முனைப் பகுதியில் இரவு நேரத்தில்...
சீனா எல்லையில் சத்ரபதி சிவாஜி சிலை: இந்திய ராணுவம் திறப்பு
இந்தியா-சீனா எல்லையில் 14,300 அடி மலைச் சிகரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது.
இந்த சிலையை திறந்து வைத்து இந்திய ராணுவத்தின் 14-வது படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹித்தேஷ் பல்லா, எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது: கிழக்கு லடாக் செக்டாரில் சீனாவை ஒட்டியுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு (எல்ஏசி) பகுதியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
14,300 மலைச் சிகரத்தில் பாங்கோங் ஏரி பகுதியில் இந்திய ராணுவம் அமைத்துள்ள இந்த சிலை சிவாஜியின் வீரம், தொலைநோக்கு பார்வை மற்றும்...














