Home 2024
Yearly Archives: 2024
வறட்சியால் சம்பா, தாளடி விளைச்சல் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.40,000 வழங்க அன்புமணி வலியுறுத்தல்
சம்பா பருவத்தில் விளைச்சல் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் குறுவை பருவத்தில் முழுமையாக கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதமும், ஓரளவு கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தது 40% முதல் 94% வரை விளைச்சல்...
மாசி திருவிழா: குமரியில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தர்கள் பாதயாத்திரை
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலையில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டனர்.
காவடி ஊர்வலம், புஷ்ப காவடி, பன்னீர் காவடி, எண்ணெய் காவடி, வேல் காவடி, பறக்கும் காவடி என விதவிதமான காவடிகளுடன் பக்தர்கள் பயபக்தியுடன் புறப்பட்டனர்.இரணியல் சுற்று வட்டார பகுதி,...
“அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டும் சிறந்த மனிதர் வெற்றி துரைசாமி” – வெற்றிமாறன் உருக்கம்
“எப்போதும் சிரித்துக்கொண்டு, அன்புடன் பழகும் மனிதர். மனிதர்களுடன் மட்டுமல்லாமல், அனைத்து உயிர்களுடனும் அன்பாக இருக்கும் மனிதர். அவருடைய மறைவு ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு” என இயக்குநர் வெற்றிமாறன் கண்ணீர் மல்க உருக்கமாக பேசியுள்ளார்.திரைப்பட இயக்குநர் வெற்றி துரைசாமியின் நினைவேந்தல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “வெற்றி துரைசாமி சினிமா தொடர்பான இடங்களில் தன்னை அறிமுகப்படுத்தும்போது, என்னுடைய மாணவர் என்று தான் அறிமுகம் செய்வார். என்னிடம் தான் சினிமா கற்றுக்கொண்டேன் என்பார். உண்மையில் நான் தான் அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்....
சென்னையில் முதன்முறையாக காமிக் கான் நிகழ்ச்சி
மார்வல், டிசி, டிஸ்னி , நரூட்டோ என்ற அனிமி உட்பட பல்வேறு காமிக் கதாபாத்திரங்கள் உலகளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளன.இந்நிலையில் இந்த காமிக்ஸ் ரசிகர்களுக்காக, சென்னையில் முதன்முறையாக 'காமிக் கான்' நிகழ்வுநடத்தப்படுகிறது. கார்ட்டூன் கதாபாத்திரங்கள் அடிப்படையிலான தொடர் நிகழ்ச்சியான இது, சர்வதேச அளவில் பிரபலமானது. 'காமிக் கான் இந்தியா' அமைப்பு நடத்தும் இந்நிகழ்வு இந்தியாவில் டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் எற்கெனவே நடைபெற்றுள்ளன. இப்போது முதன்முறையாக சென்னையில் நடைபெறுகிறது. வரும் 17, 18 -ம் தேதிகளில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கும்...
’பர்த்மார்க்’ படத்தில் என்ன கதை?
‘டான்ஸிங் ரோஸ்' ஷபீர் கல்லரக்கல், மிர்ணா, தீப்தி, இந்திரஜித் உட்பட பலர் நடித்துள்ள படம், 'பர்த்மார்க்'. ஸ்ரீராம் சிவராமன் தயாரித்துள்ள இந்தப் படத்தை விக்ரம் ஸ்ரீதரன் இயக்கியுள்ளார். உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் பற்றி இயக்குநர் விக்ரம் ஸ்ரீதர் கூறியதாவது:இயற்கை முறை பிரசவம் பற்றி பேசும்படம் இது. அறுவைசிகிச்சை இல்லாமல் இயற்கையான பிரசவத்துக்கு இந்தியாவில் சில கிராமங்கள் பெயர் பெற்றதாக இருக்கின்றன. அதன் பின்னணியில் கற்பனையான கதையாக இதை உருவாக்கி இருக்கிறோம்....
மத நல்லிணக்கத்துக்கு சான்று அபுதாபி சுவாமி நாராயண் கோயில் – திறப்பு விழாவில் பங்கேற்ற சரத்குமார் நெகிழ்ச்சி
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயில் அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துக்கு சான்றாக உள்ளதாக கோயில் திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.அபுதாபியில் ரூ.700 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் மோடி நேற்று (பிப்.14) திறந்துவைத்தார். பின்னர் அங்கு நடைபெற்ற பூஜைகளிலும் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல், திரைப் பிரபலங்கள் கொண்டனர். இந்த விழாவில் பங்கேற்ற நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத் குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இது ஒரு மிகச்சிறந்த அனுபவம்....
ரூ.700 கோடி செலவில் அபுதாபியில் சுவாமி நாராயண் கோயில்: பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்
ரூ.700 கோடி செலவில் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார்.
2 நாள் பயணமாக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) வந்துள்ளார். நேற்று முன்தினம் துபாய் வந்த பிரதமர் மோடி, அந்த நாட்டு அதிபர் முகமதுபின் சையது அல் நஹ்யானை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே துறைமுகம், முதலீடு, எரிசக்தி, வர்த்தகம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தொடர்பான 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. யுஏஇ-யில் யுபிஐ மற்றும் ரூபே அட்டை...
ராஜ்கோட்டில் 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்தும் முனைப்பில் இந்திய அணி
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. கணிக்க முடியாத அணியாகவும் அச்சமின்றியும் விளையாடி வரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது.இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, இந்தியாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இதில் இருந்து மீண்டு வந்து விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று...
மாநிலங்களவை தேர்தல் பாஜக வேட்பாளர் பட்டியல்: நட்டா, அஷ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் போட்டி
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் எல்.முருகன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களில் 56 பேரின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ளது.
இதையடுத்து, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதன்படி, கடந்த 8-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் வரும் 15-ம் தேதி முடிவடைய உள்ளது.
இந்நிலையில், மாநிலங்களவை...
விவிபாட் இயந்திரங்களை 100% அதிகரிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: தேர்தலில் விவிபாட் இயந்திரங்கள் அதிகளவில் பயன்படுத்துவது குறித்து விவாதிக்க, தேர்தல் ஆணையத்திடம் இண்டியா கூட்டணி கடந்தாண்டு ஜூன் முதல் நேரம் கேட்டு வருகிறது. 100 சதவீத விவிபாட் இயந்திரங்களை அனுமதிக்கவில்லை என்றால், அது இந்திய வாக்காளருக்கு மிக மோசமான விஷயமாக இருக்கும்.
விவிபாட் இயந்திரங்களுடன் கூடிய வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டே தெரிவித்தது.
ஆனால், இது தொடர்பாக ஆலோசனை நடத்த...














