Google search engine
Home 2024

Yearly Archives: 2024

மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா டி.ஆர்.பாலு?

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி.யாக உள்ள டி.ஆர்.பாலுவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சியும் கேட்பதால் தலைமை என்ன முடிவெடுக்குமோ என திமுகவினர் குழப்பமடைந்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு போட்டியிட்டு வெற்றிபெற்று ௭ம்.பி. ஆனார்.திமுக பொருளாளராகவும் அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவராகவும் உள்ளார். கட்சியின் மூத்த நிர்வாகியான டி.ஆர்.பாலுவுக்கு 86 வயதாகிறது. எனவே, அவருக்கு ஓய்வு அளிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தொண்டர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இதனால், அவருக்கு...

அந்நிய செலாவணி சட்டத்தை மீறிய வழக்கு – மஹுவா மொய்த்ராவுக்கு அமலாக்கத் துறை சம்மன்

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.யாக பதவி வகித்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் பிரதமர் மோடி, தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய மக்களவை நெறிமுறைக் குழு அளித்த பரிந்துரையின் பேரில் அவருடயை மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. இதனிடையே, மொய்த்ரா மீது சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்கு...

எல்லையில் போர் வீரர்கள் போல விவசாயிகள் நாட்டுக்காக போராடுகின்றனர்: ராகுல் காந்தி கருத்து

எல்லையில் போர் வீரர்கள் போல், விவசாயிகள் நாட்டுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர் என ராகுல்காந்தி கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று பாரத் நியாய யாத்திரை மேற்கொண்டார். அப்போது பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் தற்போது போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், எல்லையில் போர் வீரர்களைப்போல நாட்டுக்காக போராடுகின்றனர். நாட்டு நலனுக்காக விவசாயிகள் போராட்டம் நடத்துவது, போர் வீரர்களின் தியாகத்துக்கு இணையானது. ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும் மணிப்பூர் மாநிலத்தை பற்றி எரியச் செய்த...

நாட்டிலேயே முதன்முறையாக உத்தராகண்டில் விரைவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகம்

நாட்டிலேயே முதன்முறையாக உத்தராகண்ட் மாநிலத்தில் அவசர மருத்துவ சேவையில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட உள்ளதாக மத்திய விமானத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில், “விரைவிலேயே உத்தராகண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருக்கும்.150 கி.மீ. சுற்றளவு: அங்கிருந்து 150 கி.மீ. சுற்றளவில் அது சேவை வழங்கும். அவசர சிகிச்சை தேவைப்படுவோர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவர்” என்று பதிவிட்டுள்ளார். மலைப்பகுதியான உத்தராகண்டில், மக்களை அவசர...

ஜே.பி.நட்டா உட்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்

15 மாநிலங்களில் ஏப்ரல் 2-ம் தேதியுடன் காலியாகவிருக்கும் 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் குஜராத்தில் இருந்து பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கோத்ரா பகுதி மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங் பார்மர், பிரபல வைர வியாபாரி கோவிந்த் தோலக்கியா, மாநில பாஜக ஓபிசி மோர்ச்சா தலைவர் மாயங்க் நாயக் ஆகிய நால்வரும் நேற்று காந்திநகரில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். முன்னதாக ஜே.பி.நட்டா உள்ளிட்ட 4 வேட்பாளர்களும் குஜராத் முதல்வர் பூபேந்திர...

மத்திய அமைச்சர் அமித் ஷா போல் போனில் பேசி பண மோசடி – ஒருவர் கைது @ உ.பி

உ.பி.யில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குரலில் பேசி பணமோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம், பிலிபித் மாவட்டத்தின் பர்கேரா சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ கிஷன்லால் ராஜ்புட். பாஜகவைச் சேர்ந்த இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சக அலுலகத்திலிருந்து பேசுவதாக கூறி ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் தான் மத்திய அமைச்சர் அமித் ஷா என்றும், தனக்கு பணம் கொடுத்தால் வரும் தேர்தலில்...

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை; 3 மாதங்களில் 6,500 கடைகளுக்கு ‘சீல்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6,500 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து மாபெரும் கல்விக்கடன் முகாமைசென்னை நந்தனத்தில் நடத்தின.இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று மாணவர்களுக்கு கல்விக்கடன் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து, அடையாறு புற்றுநோய் நிறுவனம் சார்பில் இளைஞர்கள் நல விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால்...

‘மக்களுடன் முதல்வர்’ திட்ட விழா | 1,598 பேருக்கு பணி நியமன ஆணை: நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்

மக்களுடன் முதல்வர’ திட்டத்தின்கீழ், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறும் விழாவில்,1,598 பேருக்கு அரசுப் பணி நியமனஆணைகள், நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு அலுவலர்களைத் தேடிச்சென்று மக்கள் மனுக்களை தந்து குறைகளைக் தெரிவித்து, தீர்வு காண்பது என்பது இதுவரை நடைமுறையாக இருந்தது. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களைத் தேடி அதிகாரிகள் சென்றுகுறை கேட்டுத் தீர்த்து வைக்க விரும்பினார். முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னுரிமை...

‘மத்திய அரசிடம் நிதி பெற இணைந்து குரல் கொடுங்கள்’ – பேரவையில் பழனிசாமிக்கு முதல்வர் அழைப்பு

உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் தமிழகத்தில் இந்த ஆண்டு ரூ.11,132 கோடியில் 797 பணிகளை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மெட்ரோ ரயில் பணிக்கு மத்திய அரசிடம் நிதி பெறஎங்களுடன் இணைந்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று பதில் அளித்தார். சென்னை மெட்ரோ ரயில் மற்றும் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டம் தொடர்பானஎதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் கேள்விகளுக்கும்...

பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்தால் உலகத்தரம் வாய்ந்த சென்னையை உருவாக்குவோம்: அண்ணாமலை உறுதி

பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்தால் உலகத்தரம் வாய்ந்த சென்னையை உருவாக்குவோம் என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கொளத்தூர் சட்டபேரவை தொகுதிக்கு உட்பட்ட அகரம் சந்திப்பில் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்ட காக்கி சீருடை அணியும் அனைத்து வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: 2024 மக்களவை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி: பாஜகவை பார்த்து முதல்வர் பயப்படுகிறார் -நயினார்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகின்ற 15ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நாகர்கோவில் வரும் பிரதமர் மோடி, ரோட்...

நாகர்கோவிலில் வாக்கு என்னும் மையத்தில் தீவிர ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல் பணிகளின் ஒரு பகுதியாக, ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பெட்டிகள் கோணம் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன....

குமரி: கோவிலில் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள நாராயணசாமி கோவிலில் நேற்று மாலை பணி விடை செய்ய சென்ற பூசாரி செல்வகுமார், கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார். சாமி கழுத்தில் இருந்த தங்க சங்கிலி,...