Home 2024
Yearly Archives: 2024
நடப்பு நிதி ஆண்டின் கூடுதல் செலவுக்காக ரூ.30,355 கோடிக்கு இறுதி துணை மதிப்பீடுகள்: பேரவையில் நிதி அமைச்சர் தாக்கல்
சட்டப்பேரவையில், 2023-24 நிதி ஆண்டின் கூடுதல் செலவுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்றுதாக்கல் செய்து பேசியதாவது:
பேரவையில் வைக்கப்பட் டுள்ள இறுதிதுணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.30,355.32 கோடி நிதிஒதுக்கத்துக்கு வகை செய்கின்றன. இதில், ரூ.26,590.09 கோடி வருவாய்கணக்கிலும், ரூ.3,499.98 கோடி மூலதன கணக்கிலும், ரூ.265.25 கோடி கடன் கணக்கிலும் அடங்கும்.
சட்டப்பேரவையில் 2023-24-ம்ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகள் கடந்த 2023 அக்டோபர் 9-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிறகு, புதிய பணிகள், புதிய துணை பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட செலவினங்களுக்கு பேரவையின்...
யாருடைய ஆட்சியில் அதிக கடன் வாங்கப்பட்டது? – சட்டப்பேரவையில் திமுக-அதிமுக காரசார விவாதம்
தமிழக சட்டப்பேரவையில் நேற்றுநடைபெற்ற விவாதத்தில் யார்ஆட்சியில் அதிக கடன் வாங்கப்பட்டது என்பது தொடர்பாகதிமுக-அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்கள் மீதான விவாதம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது அதிமுக உறுப்பினர் பி.தங்கமணி பேசும்போது, யார்ஆட்சியில் அதிக கடன் வாங்கப்பட்டது தொடர்பான கேள்வி எழுந்ததைத் தொடர்ந்து திமுக-அதிமுக இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: திமுக ஆட்சியில் அதிகளவில் கடன் வாங்கப்பட்டுள்ளது. அதிலும் மூலதனச் செலவை விட வருவாய் செலவு தான் அதிகமாக உள்ளது. திமுக...
மார்ச் 3-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்: 57.83 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு
தமிழகத்தில் மார்ச் 3-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இதில்5 வயதுக்குட்பட்ட 57.83 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. அதனால், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி (ஞாயிறு) போலியோ சொட்டு...
மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசிடம் வலியுறுத்தி வாங்கித்தர வேண்டும்: வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் வலியுறுத்தல்
மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலையும், மத்திய அரசின் பங்களிப்பு நிதியையும் பெற்று தர வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்கள் மீதான விவாதத்தில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது, ‘‘கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வருவதற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளேன்’’ என்றார். இதுதொடர்பாக நேற்று நடந்த விவாதம்:
அமைச்சர் தங்கம் தென்னரசு: கொச்சி மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு தமிழகத்துக்கு மட்டும் தாமதம் செய்கிறது. நிதியும் தருவதில்லை. ரூ.69,000 கோடி மதிப்பீட்டில் நடைபெறும்...
மக்களின் மனஓட்டம் தெரியும்; கூட்டணிக்காக அலைபாயவில்லை: செல்லூர் ராஜு கருத்து
தமிழக சட்டப்பேரவையில் 2024-25-ம் நிதியாண்டு பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான பொது விவாதம் நேற்று நடைபெற்றது. அதிமுக உறுப்பினர் செல்லூர் கே.ராஜு விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
வறட்சி நிவாரணம், புயல் நிவாரணம் உட்பட பல நிவாரண உதவிகளை செய்து விவசாயிகளை கைதூக்கி விட்டது அதிமுக அரசு. இரண்டு முறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்துள்ளோம். 2011 முதல் 2021-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் 1 கோடியே 6 லட்சத்து 98,482 விவசாயிகளுக்கு ரூ.60,646 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்: 2011 முதல்...
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா மார்ச் 3-ந்தேதி தொடக்கம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடைவிழா அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கோவில் தங்கும் விடுதி வளாகத்தில் தனிப்பந்தலில் ராதாகிருஷ்ணபுரம் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 87-வது இந்து சமய மாநாடு நடக்கிறது. மாநாட்டு பந்தலில் அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 6...
நாகர்கோவிலில் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி
நெல்லைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் புறப்பட்டது. இந்த ரெயில் நேற்று இரவு நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலம் பகுதியில் வந்த போது தண்டவாளத்தில் பெரிய கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இதைப்பார்த்த என்ஜின் டிரைவர் ரெயிலை சாமர்த்தியமாக நிறுத்த முயன்றார். ஆனால் தண்ட வாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்கள் மீது ரெயில் பயங்கர சத்தத்துடன் மோதியது. பின்னர் டிரைவர் ரெயிலை நடுவழியில் நிறுத்தினார். தண்ட வாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது குறித்து ரெயில்வே போலீசாருக்கும்,ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நாகர்கோவில் ரெயில்வே போலீசார் மற்றும்...
வீடுகள் இடிப்பு: போராட்டம்- அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண்பதாக விஜய் வசந்த் உறுதி
கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர் ஊராட்சி, செக்கடி கிராமத்தில் பொதுமக்களின் வீடுகளை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சந்தித்து அவர்களின் நியாயமான கோரிக்கையை அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண ஆவன செய்வேன் என உறுதி அளித்தார்.
கன்னியாகுமரி காங்கிரஸ் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதிகளின் பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் சுசீந்திரம் மற்றும் திங்கள் நகரில் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.டி. உதயம்...
சூர்யாவுடன் நடிக்கிறார் ஜான்வி: உறுதி செய்த போனி கபூர்
கங்குவா’ படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள சூர்யா, அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார். இதையடுத்து, மகாபாரத கதைக்களத்தைக் கொண்டு உருவாகும் ‘கர்ணா’ படத்தில் கர்ணனாக நடிக்கிறார். ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்குகிறார். இதில் திரவுபதியாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதற்கான டெஸ்ட் ஷூட் 2 முறை நடந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் சூர்யாவுடன் ஜான்வி நடிப்பதை அவர் தந்தை போனி கபூர் உறுதி செய்துள்ளார்.இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “என் மனைவி தேவி பல மொழிகளில் நடித்தார். என் மகள்...
GOAT Debate | ‘மெஸ்ஸியும் இல்லை, ரொனால்டோவும் இல்லை’ – எடன் ஹசார்ட் கருத்து
கால்பந்தாட்ட உலகின் தலைசிறந்த வீரர் யார் என்பது குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார் பெல்ஜியம் நாட்டு அணியின் முன்னாள் கேப்டன் எடன் ஹசார்ட். அது மெஸ்ஸியும் இல்லை, ரொனால்டோவும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான்களின் பட்டியலில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸியும், போர்ச்சுகலின் ரொனால்டோவும் நிச்சயம் இருப்பார்கள். இவர்கள் இருவரில் யார் தலைசிறந்தவர் (GOAT) என்ற ஒப்பீடுகள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும். அது அவர்கள் தேசிய அணிக்காக விளையாடினாலும், கிளப் அணிக்காக விளையாடினாலும் நீடிக்கும். அவ்வப்போது இருவரது கையும்...














