Google search engine
Home 2024

Yearly Archives: 2024

‘மூணாறிலிருந்து மெரினா வரை’ என்ற தலைப்பில் சுயசரிதை நூலை வெளியிட்டார் முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம்

ஓய்வுபெற்ற டிஜிபி வால்டர் ஐ.தேவாரம், ‘மூணாறிலிருந்து மெரினா வரை’ என்ற தலைப்பில் தனது சுயசரிதை நூலை வெளியிட்டார். தமிழக காவல் துறையில் டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்றவர்வால்டர் ஐ.தேவாரம். பணிக் காலத்தில் சட்டம் - ஒழுங்கை கையாள்வதில் திறன் மிக்கவராக இருந்த இவர், சமூக விரோதிகள், குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். இதன் காரணமாகவே, காவல் துறையில் பணிக்கு சேரும் பலரும் இவரை ரோல் மாடலாக ஏற்று தங்களது வழித்தடத்தை அமைத்துக் கொண்டனர்.பணியிலிருந்து ஓய்வுபெற்று சுமார் 26 ஆண்டுகள் ஆன நிலையில், ‘மூணாறிலிருந்து...

ரூ.41,000 கோடியில் 2,000 ரயில்வே திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல் – தமிழ்நாட்டில் 33 ரயில் நிலையங்கள் மேம்பாடு

நாடு முழுவதும் ரூ.41,000 கோடியில் 2,000 ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். சில ரயில்வே திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். அம்ருத் பாரத் ரயில் நிலையம்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 1,318 ரயில் நிலையங்களை உலகத் தரத்துக்கு தரம் உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக கடந்த ஆண்டில் 58 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அம்ருத் பாரத் ரயில் நிலையதிட்டத்தின் இரண்டாம் கட்டமாக 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள...

சீன பொருட்கள் சந்தைகளில் குவிவதால் சிறுதொழில், கைவினைஞர்கள் பாதிப்பு: யாத்திரையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராகுலின் இந்திய ஒற்றுமை நியாயயாத்திரை உ.பி.யின் மொரதாபாத்தில் இருந்து சம்பல் வழியாக : நேற்று அலிகார் வந்தடைந்தது. ராகுல் காந்தியை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்தனர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது: அலிகாரின் பூட்டுத் தொழில், கைவினைஞர்களின் தயாரிப்புகள் உலகளவில் புகழ்பெற்றவை. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் மலிவான பொருட்கள் இந்திய சந்தைகளை நிறைப்பதால் உள்ளூர் சிறுதொழில், குடிசைத் தொழில்கள் அழியும் தருவாயில் உள்ளன. அதேநேரம், பெரிய வணிக நிறுவனங்கள் வளமான லாபத்தை அறுவடை செய்கின்றன. அடுத்த முறை இந்த நகரத்துக்கு வரும்போது, சீனாவில் தயாரிக்கப்பட்ட...

காஷ்மீரில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு ஓட்டுநர் இல்லாமல் 100 கி.மீ. ஓடிய சரக்கு ரயில்

காஷ்மீரில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரயில் 100 கி.மீ. தொலைவு வரை ஓடியது. ரயில்வே ஊழியர்கள் நீண்ட நேரம் போராடி ரயிலை நிறுத்தினர். கடந்த 2010-ம் ஆண்டில் ஹாலிவுட்டில் 'அன்ஸ்டாப்பபிள்' என்ற திரைப்படம் வெளியானது. 39 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில், ஓட்டுநர் இல்லாமல் சீறிப் பாயும். அந்த சரக்கு ரயிலை நிறுத்த நடக்கும் அதிதீவிர போராட்டங்கள் திரைப்படத்தில் விவரிக்கப்பட்டு இருக்கும். இதுபோன்ற சம்பவம் காஷ்மீரில் நடைபெற்றுள்ளது. காஷ்மீரின் கதுவா ரயில் நிலையத்தில் 53 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில்...

சர்வதேச போட்டியில் செயல்படுவதற்கு நடுவர் லிண்டனுக்கு தகுதி இல்லை: வனிந்து ஹசரங்கா குற்றச்சாட்டு

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் செயல்படுவதற்கு நடுவர் லிண்டன் ஹன்னிபாலுக்கு தகுதி இல்லை என்று இலங்கை அணி கேப்டன் வனிந்து ஹசரங்கா குற்றம்சாட்டியுள்ளார். இலங்கையில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி தம்புல்லா நகரில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. பின்னர் இலங்கை அணி விளையாடியது. ஆட்டத்தின் கடைசி ஓவரை, ஆப்கானிஸ்தான் வீரர்...

ஐசிபிஎல் கிரிக்கெட் போட்டி: திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் சாம்பியன்

இந்தியா சிமெண்ட் புரோ லீக் (ஐசிபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 2-வது சீசனில் திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இந்தப் போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஐசிபிஎல் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ், காரைக்குடி சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய திண்டுக்கல் அணி 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய காரைக்குடி அணி 12 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள்...

“இந்த பிட்சில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” – பஷீர் சொல்லும் வெற்றி வாய்ப்புகள்

இங்கிலாந்து அணியின் உயரமான ஆஃப் ஸ்பின்னர் ஷோயப் பஷீர் தன் முதல் 5 விக்கெட் பவுலிங்கை தன் தாத்தாக்களுக்கு அர்ப்பணித்துள்ளார். இந்திய அணி வெற்றி பெற மேலும் 152 ரன்கள் தேவை என்ற நிலையில் 10 விக்கெட்டுகளையும் இங்கிலாந்து வீழ்த்தினால்தான் வெற்றி. பிட்சில் பந்துகள் மிக மிக தாழ்வாக வருகின்றன. சில பந்துகள் எழும்புகின்றன, திரும்புகின்றன. ஆகவே இந்திய அணிக்குக் கடினம், நாங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்தப் பிட்சில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஷோயப் பஷீர் தெரிவித்துள்ளார்.ஷோயப் பஷீர் தொடர்ச்சியாக 31 ஓவர்களை...

திரை விமர்சனம்: பைரி

நாகர்கோவில் அருகிலுள்ள அறுகு விளையில் நூறாண்டுகளாக நடந்துவருகிறது புறா பந்தயம். அதில் ராஜலிங்கத்தின் (சையத் மஜீத்) குடும்பமும் ஒன்று. இந்தப் புறா பந்தயத்தால் வாழ்க்கை நாசமாவதாக நினைக்கும் அவரின் அம்மா சரஸ்வதி (விஜி சேகர்),லிங்கத்தைப் படிக்க வைத்து அதிலிருந்து திசைத் திருப்ப நினைக்கிறார். ஆனால், அம்மாவை ஏமாற்றிவிட்டு புறா பந்தயத்தில் மனதைச் செலுத்துகிறார் லிங்கம். இந்தப் பந்தய புறா வாழ்க்கை, அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் என்ன மாதிரியான வில்லங்கங்களை இழுத்துவருகிறது என்பதுதான் மீதி கதை. புறா வளர்ப்பு மற்றும் அதன் பந்தயப் பின்னணியில், ரத்தமும்...

‘கல்கி 2898 AD’ மகாபாரதத்தில் இருந்து தொடங்குகிறது: இயக்குநர் நாக் அஸ்வின் தகவல்

பிரபாஸ், கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் கதை மகாபாரதத்தில் இருந்து தொடங்கி 2898-ல் முடிகிறது என்று அப்படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் தெரிவித்துள்ளார். நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘கல்கி 2898 ஏடி’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் ரிலீசாகவுள்ளது. அறிவியல் புனைவு திரைப்படமான இதன் அறிமுக வீடியோ வரவேற்பை...

பிறந்தநாளுக்கு ரூ.3 கோடியில் ‘கோல்டு கேக்’ வெட்டிய ஊர்வசி ரவுதெலா: நெட்டிசன்கள் விமர்சனம்

ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஊர்வசி ரவுதெலாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் ஊர்வசி ரவுதெலா, தமிழில் லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதுதவிர தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஏராளமான ஆல்பம் பாடல்களிலும் தோன்றியுள்ளார். இந்த நிலையில் நேற்று (பிப்.25) ஊர்வசி ரவுதெலா தனது 30வது பிறந்தநாளை மும்பையில் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நெல்லை, குமரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை.. வானிலை எச்சரிக்கை

தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி. காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 9) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே...

நாகர்கோவில் பூத்தில் அதிக ஓட்டு பெற்றால் மோதிரம் -நயினார்

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக தமிழ் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வேட்பாளர் எம். ஆர். காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில்...

இரணியல்: ரயில் நிலையம் ‘பி’ பிரிவு தர நிலைக்கு உயர்வு

இந்திய ரயில்வேயை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், குமரி மாவட்டம் இரணியல் ரயில் நிலையம் பழைய சிக்னல் மற்றும் ரயில் இயக்க கட்டுப்பாட்டு முறைகளை மாற்றி, 'மின்னணு இன்டர்லாக்கிங்' மற்றும் கணினி வழி கண்காணிப்பு வசதியுடன் தரம்...