Home 2024
Yearly Archives: 2024
சிறைகளில் குழந்தைகளுக்கு உகந்த நேர்காணல் அறைகள்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
மதுரையைச் சேர்ந்த கே.ஆர்.ராஜா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக சிறைகளில் உள்ள கைதிகளை, உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சந்தித்துப் பேசுவதற்கு இடுப்பளவு சுவரின் மேல், கம்பி வலை பொருத்தப்பட்ட கட்டமைப்பு உள்ளது. இந்தக் கட்டமைப்பு வழியாக கைதிகளுடன் உறவினர்கள், வழக்கறிஞர்கள் சரியாகப் பேச முடிவதில்லை.
மேலும், சிறையில் உள்ள பெற்றோரைப் பார்க்க குழந்தைகளும் வருகின்றனர். கம்பி வலைக்குப் பின்னால் நிற்கும் தனது பெற்றோரைப் பார்க்கும் குழந்தைகள், மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.
வீடுகளுக்குச் சென்ற பிறகும், சிறையில் தனது தந்தை, தாயின் நிலையை...
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உடல்நல பாதிப்பால் உயிரிழப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (பிப்.28) காலை காலமானார். கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஜனவரி மாதம் முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் உயிரிழந்தார். இதனை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று...
“பாஜகவில் சேருவதாக பொய் தகவல் பரப்புகின்றனர்!” – எஸ்.பி.வேலுமணி ஆவேசம்
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் சேருவதாக பொய்தகவல் பரப்புகின்றனர். வெறும் 3 முதல் 4 சதவீத வாக்காளர்கள் உள்ள பாஜகவில், அதிமுகவினர் சேருவார்களா என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கூறினார்.முன்னாள் எம்எல்ஏ சிங்கை கோவிந்தராஜனின் 25-வது ஆண்டுநினைவு நாள் நிகழ்ச்சி சிங்காநல்லூரில் நேற்று நடைபெற்றது. இதில், எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: தற்போதைய அரசியல் சூழலில்சமூக வலைதளங்களில் பல்வேறுதகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுகின்றன.
இதற்காக திமுக மற்றும் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவை பாராட்ட வேண்டும். இல்லாததை இருப்பதைப் போலவும், இருப்பதை இல்லாதது போலவும்...
கைதான மீனவர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவிய விஜய் வசந்த்
குளச்சல் துறைமுகத் தெருவில் வசிக்கும் ஆண்டனி தாஸ் அல்போன்ஸ் மீன்பிடி தொழில் செய்ய குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து மேலும் ஆறு மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்று பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தை சந்தித்து குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற விஜய் வசந்த் மீனவர்களை விடுவிக்க ஆவன செய்வதாக உறுதி அளித்தார். மேலும் அவர்கள் குழந்தைகளின் கல்வி தேவைக்கு நிதியுதவி தேவை என்பதை அறிந்த பாராளுமன்ற...
நாடு முழுவதும் 553 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டம்: ரூ.41,000 கோடி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
நாடு முழுவதும் ரூ.41,000 கோடியில் 2,000 ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இதில் அம்ருத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 553 ரயில் நிலையங்கள் உலகத் தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளன.
நாடு முழுவதும் நாள்தோறும் 2 கோடி பேரும், ஓராண்டில் 800 கோடி பேரும் ரயில்களில் பயணம் மேற்கொள்கின்றனர். இதை கருத்தில் கொண்டுரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதியை மேம்படுத்த கடந்த 2023-ம் ஆண்டு ஆஸ்ட் 6-ம் தேதி அம்ருத் பாரத் ரயில் நிலையம் திட்டம்...
வாராணசி வியாஸ் மண்டபத்தில் தினசரி பூஜைக்கு தடை விதிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுப்பு
வாராணசியில் வியாஸ் மண்டபத்தில் நடைபெறும் பூஜைக்கு தடை விதிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. கியான்வாபி மசூதி நிர்வாகத்தின் மனுமீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உ.பி.யின் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. கோயிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு இம்மசூதி முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாக புகார் உள்ளது. இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றம் உத்தரவின்படி இந்திய தொல்லியல் துறை ஆய்வுநடத்தி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இந்நிலையில் மசூதியின் ஓசுகானா ஓரத்தின் அடித்தளத்தில் சுமார் 8 அடி அகலமும், 30 அடி நீளமும் கொண்ட...
மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரிய மனோஜ் ஜராங்கேவின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்
மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி மனோஜ் ஜராங்கே பாட்டீல் என்பவர் போராடி வருகிறார். இவர் ஜால்னா மாவட்டம் அந்தர்வலி சாரதி கிராமத்தில் கடந்த 10-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
இந்நிலையில், மராத்தா சமூகத்தினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் கடந்த வாரம் நிறைவேறியது. எனினும், ஓபிசி பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தனது போராட்டத்தை தொடர்ந்தார் மனோஜ். இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தின் 17-வது நாளான நேற்று தனது போராட்டத்தை வாபஸ்...
பாலாற்றில் ரூ.750 கோடி செலவில் 3 அணைகள்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு
தமிழக - கர்நாடகா மாநில எல்லையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் தொகுதியில் கடந்த 7 முறை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது 8-வது முறையாகவும் குப்பம் தொகுதியில் அவர் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆதலால், தற்போதைய முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி, குப்பத்தில் தனது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டுமென ஆர்வமாக உள்ளார். அதற்காக குப்பம் தொகுதியில் உள்ள ராமகுப்பம் மண்டலம், ராஜுபேட்டையில் ரூ.560.29 கோடி செலவில் உருவாக்கப்பட்ட அனந்த வெங்கட்ரெட்டி ஹந்திரி - நீவா...
திருப்பதி ஏழுமலையான் கோயில் கவுரவ பிரதான அர்ச்சகர் பணி நீக்கம்
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் கருணாகர் ரெட்டி தலைமையில் திருமலையில் நேற்று நடைபெற்றது.இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கருணாகர் ரெட்டி, நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேவஸ்தானத்தின் நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 9 ஆயிரம் பேருக்கு ஊதியஉயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் - வன விலங்குகள் மோதலை குறைக்க நடைபாதையில் 7-வது மைல் பகுதியில் ‘நித்ய சங்கீர்த்தனார்ச்சனை’ எனும் திட்டம் அமல்படுத்தப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24-ம் தேதி திருப்பதி உருவான நாள்...
500 மின்சார பேருந்துகள் இயக்க டெண்டர்
500 மின்சார பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் டெண்டர் வெளியிட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 659 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. 32 டிப்போக்கள் மூலம் கையாளப்படும் இந்த பேருந்துகளில் தினமும் 33.60 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நாளுக்கு நாள் சென்னையில் போக்குவரத்து தேவையும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டுள்ளதால், சென்னை உட்பட புறநகர் பகுதிகளில் இருந்து தினசரி கூடுதல் பேருந்துகளை இயக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பயணிகளின் தேவையை போக்குவதற்காக கூடுதல் பேருந்துகள்...














