Google search engine
Home 2024

Yearly Archives: 2024

குவைத் தீ விபத்து சம்பவம்: மத்திய அரசின் முயற்சிகளுக்கு பினராயி விஜயன் பாராட்டு

குவைத் தீ விபத்தில் இறந்த 45 இந்தியர்கள் உடல்கள் இந்திய விமானப் படை விமானம் மூலம் நேற்று காலை கொச்சி வந்து சேர்ந்தன. இவற்றில் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 31 பேரின் உடல்கள் அந்தந்த மாநில அரசுகளின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தெற்கு குவைத்தின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் 196 பேர் தங்கியிருந்தனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த குடியிருப்பில் கடந்த புதன்கிழமை...

“இந்தியத் தேர்தல் முடிவுகள் ஜனநாயக உலகத்துக்கான வெற்றி” – பிரதமர் மோடி பேச்சு @ ஜி7 மாநாடு

“இந்தியத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த ஜனநாயக உலகத்துக்கான வெற்றி” என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் இவிஎம் தொழில்நுட்பத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மை ஆகியனவற்றை சுட்டிக்காட்டிப் பாராட்டினார். 50வது ஜி7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் உறுப்பு நாடுகளாக கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. இம்மாநாட்டை இத்தாலி நடத்துகிறது. அல்ஜீரியா, அர்ஜென்டினா, பிரேசில், இந்தியா, ஜோர்டான், கென்யா, துனிஷியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், உக்ரைன், மொரிட்டானியா,...

தமிழக நெடுஞ்சாலைகளில் பாதயாத்திரை பக்தர்கள் செல்ல தனி பாதை: ஐகோர்ட் உத்தரவு

தமிழக நெடுஞ்சாலைகளில் பாதயாத்திரை பக்தர்களுக்கான தனிப்பாதை வசதி ஏற்படுத்தக் கோரிக்கையில் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உரிய உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கோயில்களுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். பகல் நேரத்தில் வெப்பம் அதிகம் இருப்பதால் மாலை மற்றும் இரவு நேரங்களில் பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். தேசிய நெடுஞ்சாலைகள், மாவட்ட நெடுஞ்சாலைகள் பெரும்பாலானவை இரு வழிச்சாலையாக இருக்கின்றன. இந்தச் சாலைகளில் போதுமான தடுப்புகள் இல்லை. வாகனங்களில் அதிக ஒளி வீசும் முகப்பு விளக்குகள்...

‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் மாதம்தோறும் ரூ.1,000: முதல்வர் ஸ்டாலின்

அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 அளிக்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பள்ளிக்கல்வித் துறை சார்பில், 2023-2024-ம் கல்வி ஆண்டில் 10, 12-ம்வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா, தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் விழா,...

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டுக்கான செயல்திட்ட சட்டம்: அரசிதழில் வெளியீடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்கான செயல்திட்ட சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில், பொதுமக்கள் அறிந்துகொள்ள அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டம் தயாரித்தல், கண்காணித்தல் ஆகியவற்றுக்காக புதிதாக சட்டம் உருவாக்குவதற்கான மசோதாவை ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கடந்த பிப்ரவரியில் அறிமுகம் செய்தார். அந்தச் சட்டத்துக்கு ஆளுநர் தற்போது ஒப்புதல்அளித்துள்ளதால், தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டப்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தமாநில அளவில் முதல்வர்...

அமைச்சர் நேருவின் பேஸ்புக் பதிவில் லால்குடி எம்எல்ஏ பகிர்ந்த கருத்து: கட்சியில் சலசலப்பு

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கேஎன் நேருவின் முகநூல் பக்கத்தில் லால்குடி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர் சௌந்தர பாண்டியன் கமெண்ட் பகுதியில் வெளியிட்டஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு, மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் மற்றும் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார் இது தொடர்பாக அமைச்சர் கேஎன் நேரு தனது முகநூல் பக்கத்தில், லால்குடியில் புதிய வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கான...

அனைத்து பள்ளிகளிலும் ‘மாணவர் மனசு’ புகார் பெட்டி: மகளிர் ஆணைய தலைவர் உத்தரவு

அனைத்துப் பள்ளிகளிலும் 'மாணவர் மனக்' புகார் பெட்டியை வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி உத்தரவிட்டுள்ளார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி பேசியதாவது: தலைமை வகித்துப் பேசியதாவது: அனைத்துப் பள்ளிகளிலும் ‘மாணவர் மனசு’ புகார் பெட்டியை வைக்க வேண்டும் புகார் பெட்டிக்கு வரும் கடிதங்களை பள்ளி மேலாண்மைக் குழு மற்றும்...

காஷ்மீர் பாதுகாப்பு குறித்து மோடி ஆய்வு: முழு திறனையும் பயன்படுத்த பாதுகாப்பு படைக்கு உத்தரவு

ஜம்மு காஷ்மீரில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற 4 தீவிரவாத தாக்குதலையடுத்து, பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படைகளின் முழுதிறனையும் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் ரெசி மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்த பக்தர்கள் மீது தீவிரவாதிகள் கடந்த 9-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர். தெற்கு கதுவா மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி பாதுகாப்பு படையினரின் சோதனை சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினர் இடையேபயங்கர துப்பாக்கி சண்டை...

மணிப்பூரில் நடந்த கலவரம் மத ரீதியிலானது அல்ல: கேரள கத்தோலிக்க திருச்சபை கருத்து

மணிப்பூர் விவகாரம் மதக்கலவரம் அல்ல. இரண்டு பழங்குடி இனங்களுக்கு இடையிலான மோதல் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து மலங்கரா சிரியன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாசெலி யோஸ் மார்த்தோமா மேத்யூஸ் (மூன்றாம்) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எல்லா அடுக்குகளையும் சேர்ந்த மக்களை சமமாக மதித்துஅவர்களது நலனை உறுதி செய்பவரே உண்மையான ஆட்சியாளர்.சமயசார்பின்மை என்பதே இந்தியாவின் தனிப்பெரும் அடையாளமாகும். கண்மணியைக் காப்பது போன்று சமயசார்பின்மையை புதிய மத்திய அரசு பாதுகாக்கும் என்று இந்த திருச்சபை உறுதியாக நம்புகிறது. ஏற்கெனவே மணிப்பூரில் நிகழ்ந்ததுபோன்ற துயரகர சம்பவம் இனி நிகழாதவண்ணம்...

‘உருதுஸ்தான்’ தனிநாடு கேளுங்கள்: முஸ்லிம்களை தூண்டும் சீக்கிய அமைப்பு

முஸ்லிம்களிடம் தனி நாடு கோரிக்கையை தூண்டிவிடும் நடவடிக்கைகளில் சீக்கிய பிரிவினைவாத அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக பாதுகாப்பு முகமைகளுக்கு உளவுத் துறை மூலமாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காலிஸ்தான் பிரிவினைவாத குழுவைச் சேர்ந்த சீக்கியர்கள் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஏராளமான உளவுத்தகவல்கள் பாதுகாப்பு முகமைகளுக்கு கிடைத்து வருகின்றன. நீதிக்கான சீக்கிய பிரிவினைவாத அமைப்பு (எஸ்எஃப்ஜே) காலிஸ்தான் தனிநாடு கோரி ஏற்கெனவே பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், அவர்கள் முஸ்லிம்களையும் தூண்டிவிடும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்....

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவில்: ஜல்லிகள், எம். சாண்ட் விலை உயரும் அபாயம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகளால் தொடர் விபத்துகள் ஏற்படுவதைத் தொடர்ந்து, மாவட்டத்திற்குள் கனிம வள டாரஸ் லாரிகள் நுழைவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. இதனால் நேற்று முதல் மாவட்டத்திற்குள் கனிம வள டாரஸ்...

குளச்சல்: கடலில் ஒரு சிறுவன் மாயம்; 2 சிறுவர்கள் மீட்பு

குளச்சல் பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் ரியோபின் ரிட்ஜோ (14) ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்றபோது கடல் அலையில் சிக்கி மாயமானார். அவருடன் சென்ற மற்ற இரு நண்பர்கள்...

குமரி: 7 நாட்களாக பிணவறையில் தொழிலாளி சடலம்

கீரிப்பாறை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்து வந்த கேரளாவைச் சேர்ந்த சுரேஷ் (45) என்பவர், கடந்த 4ம் தேதி ரப்பர் தோட்டத்தில் சடலமாக கிடந்தார். பேச்சிப்பாறை...