Google search engine
Home 2024

Yearly Archives: 2024

2018-ம் ஆண்டு காஷ்மீர் தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானின் ஓய்வு பெற்ற பிரிகேடியர் சுட்டுக் கொலை

காஷ்மீரில் உள்ள சுன்ஜ்வான் ராணுவ முகாம் மீது கடந்த 2018-ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 6 வீரர்கள் உயிரிழந்தனர், 12-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர், பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய பிரிகேடியர் அமிர் ஹம்சா. இவர் பாகிஸ்தான் உளவுப்பிரிவு (ஐஎஸ்ஐ) நடவடிக்கைகளை திட்டமிடும் பிரிவில் பணியாற்றினார். பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் இவர் எமர்ஜென்சி சர்வீசஸ் அகாடமியின் தலைமை இயக்குனராக பணியாற்றினார். இந்நிலையில் இவர் பாகிஸ்தான் பஞ்சாப் பகுதியில் உள்ள ஜீலம்...

அடுக்குமாடி தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.12.5 லட்சம் நிவாரணம்: குவைத் அரசு முடிவு

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயில் இறந்ததொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.12.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று குவைத் அரசு அறிவித்துள்ளது. குவைத் நாட்டின் மங்கப் பகுதியில் 7 மாடி கட்டிடம் ஒன்றில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 196 பேர் தங்கியிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அந்தக்கட்டிடத்தின் தரைதளத்தில் பாதுகாவலர் அறையில் கடந்த 12-ம் தேதி மின் கசிவு காரணமாக தீப்பிடித்தது. அதிகாலை என்பதால் தொழிலாளர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். தீமளமளவென கட்டிடத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவியது. இதில் உறங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக்...

வீட்டுப் பணியாளர்களை கொத்தடிமை போல் நடத்தியதாக இந்துஜா குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு

அசோக் லேலண்ட், இன்டஸ்இண்ட் பேங்க் என இந்தியாவில் இந்துஜா குழுமம் ஆட்டோமொபைல், வங்கி, ஐடி, சுகாதாரம், பொழுதுபோக்கு, ரியல் எஸ்டேட் என பல துறைகளில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர். இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கமால்,அவரது மகன் அஜெய் மற்றும் அவரது மனைவி நம்ரதா சுவிட்சர்லாந்தில் வசிக்கின்றனர். இவர்கள் சட்டவிரோதமாக தங்கள் வீட்டில் இந்திய வேலையாட்களை பணியமர்த்தி வருவதாகவும், அவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கி அதிக மணி நேரம் வேலை செய்யமிரட்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான...

ஹங்கேரியை வீழ்த்திய ஜெர்மனி: ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறி அசத்தல் | Euro Cup

நடப்பு யூரோ கோப்பை தொடரின் ‘குரூப் - ஏ’ பிரிவு ஆட்டத்தில் ஹங்கேரியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஜெர்மனி. இதன் மூலம் இந்த தொடரில் அடுத்த சுற்றான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியாகி உள்ளது ஜெர்மனி. ஸ்டட்கார்ட் அரேனாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடியது ஜெர்மனி. எதிரணி வீரர்கள் வசமிருந்து பந்தை தட்டிப்பறித்து தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர் ஜெர்மனி வீரர்கள். ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார் ஜெர்மனி வீரர் மூஸியாலா....

ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்: இந்திய அணியில் குல்தீப்புக்கு வாய்ப்பு கிடைக்குமா? | T20 WC

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று இரவு 8 மணிக்கு பார்படாஸில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான நியூயார்க் ஆடுகளத்தில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா அணிகளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியிருந்தது. கனடா அணிக்கு எதிராக லாடர்கில் மைதானத்தில் விளையாட இருந்த கடைசி லீக் ஆட்டம் மழை காரணமாக ரத்தாகியிருந்தது. லீக் சுற்றில் இந்திய அணி வேகப்பந்து...

மே.இ.தீவுகளின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுமா இங்கிலாந்து? | T20 WC

ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில்இன்று காலை 6 மணிக்கு செயின்ட் லூசியாவில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகளுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ரோவ்மன் பொவல் தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் அணி லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருந்தது. கடைசியாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. பேட்டிங்கில் தனிப்பட்ட வீரரரை மட்டுமே சார்ந்திருக்காமல் இருப்பது அணியின் பெரியபலமாக உள்ளது....

மேற்கு வங்கத்தில் ரேஷன் பொருள் விநியோக ஊழல்: நடிகை ரிதுபர்ணாவிடம் அமலாக்க துறை விசாரணை

மேற்கு வங்கத்தில் பல கோடி ரேஷன் பொருள் வினியோக ஊழல் வழக்கில் பிரபல வங்காள நடிகை ரிதுபர்ணா செங்குப்தாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரண நடத்தினர். மேற்கு வங்கத்தில் பொது வினியோக திட்டத்துக்கான ரேஷன் பொருட்களை வெளிச் சந்தையில் விற்பனை செய்ததன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு பிரிவின் கீழ் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் பகிபுர் ரஹ்மான் என்ற தொழிலதிபரை அமலாக்கத் துறை கைது செய்தது. அவர்...

பவன் கல்யாண் ஆந்திர மாநில துணை முதல்வராக பொறுப்பேற்பு

ஜனசேனா கட்சி தலைவர் பவன்கல்யாண் விஜயவாடாவில் உள்ள அவரது அலுவலகத்தில் ஆந்திர மாநிலத்தின் துணைமுதல்வராக நேற்று பொறுப்பேற்றார். நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், தற்போதைய ஆந்திர மாநில அரசியலின் ‘கேம் சேஞ்சர்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும், சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுவை நேரில் சென்று சந்தித்த பின்னர், சிறைக்கு வெளியே வந்து, “தெலுங்கு தேசம் கட்சியுடன் ஜனசேனா கட்சியும் இணைந்து வரும் தேர்தலில் போட்டியிடும்” என அறிவித்தார். இதுதான் ஜெகனின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து விட்டது. அதன்...

தேஜஸ்வி யாதவ் மீது பிஹார் துணை முதல்வர் குற்றச்சாட்டு

பிஹாரில் நீட் வினாத் தாள் கசிந்தது தொடர்பாக அம்மாநில பொருளாதார குற்றப் பிரிவின் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. பிஹார் துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா நேற்று கூறிய தாவது: நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் பிஹார் அரசு விருந்தினர் இல்லத்தில் இருந்துகைது செய்யப்பட்டவர்களுக்கும் பிரீத்தம் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோல பிரீத்தமுக்கும் முன்னாள் துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள(ஆர்ஜேடி) மூத்த தலைவருமான தேஜஸ்வி யாதவுக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதுதொடர்பான முழு விவரத்தையும்சேகரித்து வருகிறோம். இதுகுறித்து ஆய்வு செய்து...

பேரவை இடைத்தேர்தலில் ஆசாத் கட்சி போட்டி: உ.பி.யில் பாஜகவுக்கு சாதகமாக வாக்குகள் பிரியும் வாய்ப்பு

உ.பி.யில் சட்டப்பேரவையின் 9 உறுப்பினர்கள் மக்களவைக்கு போட்டியிட்டு, எம்.பி.யாகி விட்டனர். இதனால், அந்த 9 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இத்துடன், சிஷாமா தொகுதி சமாஜ்வாதி எம்எல்ஏ இர்பான் சோலங்கி, ஒரு வழக்கில் ஏழு வருட தண்டனை பெற்றுள்ளார். இதனால் சிஷாமாவுக்கும் சேர்த்து 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி.யில் 4 முறை முதல்வரான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை (பிஎஸ்பி) போல் தலித் ஆதரவு பெற்றவராக சந்திரசேகர் ஆசாத் எனும் ராவண் வளர்ந்து வருகிறார். பீம் ஆர்மியின் நிறுவனரான இவர்,...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

உதயநிதி ஸ்டாலின் நாளை குமரியில் பிரச்சாரம்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (14) மாலை 4 மணிக்கு நாகர்கோவிலில் திமுக வேட்பாளர் ஆஸ்டின் மற்றும் கன்னியாகுமரி வேட்பாளர் மகேஷ் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். இதைத் தொடர்ந்து, குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும்...

தக்கலை: வாலிபரை வெட்டிய தந்தை , மகன் மீது வழக்கு

தக்கலை அருகே கேரளபுரம் பகுதியில் செல்போன் திருட்டு தகராறில் சங்கர் என்பவரை ஸ்ரீதரன் மற்றும் அவரது மகன் அர்ஜுன் வெட்டுக்கத்தியால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தக்கலை போலீசார் வழக்கு...

மார்த்தாண்டம்: பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் படுகாயம்

நேற்று, உண்ணாமலைகடை பகுதியை சேர்ந்த சபின் (30) தனது தாயார் லதாவுடன் பைக்கில் மார்த்தாண்டத்தில் இருந்து புதுக்கடை நோக்கி சென்றார். சூசைபுரம் பகுதியில் சென்றபோது, லதாவுக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகமானதால் பைக்கிலிருந்து...