Google search engine
Home 2024

Yearly Archives: 2024

‘லக்கி பாஸ்கர்’ தாமதம் ஏன்? – துல்கர் சல்மான் விளக்கம்

துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘லக்கி பாஸ்கர்’. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் தீபாவளியை முன்னிட்டு வரும் 31-ம் தேதி வெளியாகிறது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் பற்றி துல்கர் சல்மான் கூறும்போது, “இதில் வரும் பாஸ்கர் கேரக்டர் எல்லோருக்கும் கனெக்ட் ஆகும். இந்த வருடம் ஓரிரு படங்களில் நடிக்க இருந்தேன். ஒன்று ரத்தாகிவிட்டது....

‘பிரேமம்’ படத்தை முதலில் நிராகரித்த சாய் பல்லவி

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. இதில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானார். இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் அவர், சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘அமரன்’ படத்தில் நடித்துள்ளார். வரும் 31-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் புரமோஷனில் கலந்துகொண்ட அவர், ‘பிரேமம்’ படத்தை முதலில் எளிதாக ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சாய்பல்லவி கூறும்போது, “பிரேமம் படத்துக்காக அல்போன்ஸ் புத்திரன் என்னிடம் பேசியபோது நான் நம்ப வில்லை. அதை மோசடியான அழைப்பு...

70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை தொடங்குகிறார் பிரதமர்

எழுபது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்துக்கான பெயர் பதிவு அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்த நடைமுறைகளை பிரதமர் நரேந்திர மோடி வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எழுபது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் அவர்களின் வருமானத்தை பொருட்படுத்தாமல் மருத்துவக் காப்பீடு அளிக்கும் 'ஆயுஷ்மான் பாரத் - பிரதமர் ஜன ஆரோக்கிய யோஜனா' திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான தயார்...

அகமதாபாத்தில் போலி ஆவணங்களுடன் வங்கதேசத்தினர் 50 பேர் கைது

குஜராத்தின் அகமதாபாத் நகரில் போலி ஆவணங்களுடன் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது. வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் நாட்டின் பல பகுதிகளில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு போலி ஆதார் அட்டைகள், பான் அட்டைகளை ஒரு கும்பல் வழங்கி வருகிறது. இவ்வாறு போலி ஆவணங்களுடன் இந்தியாவில் பல இடங்களில் தங்கியிருக்கும் வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். புனே அருகில் உள்ள ரஞ்சன்கான் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 21 பேரை புனே போலீஸார் சில...

மகாராஷ்டிர வோர்லி தொகுதியில் ஆதித்ய தாக்கரேவை எதிர்த்து மிலிந்த் தியோரா போட்டி

மகாராஷ்டிர தேர்தலில் முக்கிய திருப்பமாக வோர்லி தொகுதியில் ஆதித்ய தாக்கரேவை எதிர்த்து சிவசேனா சார்பில் மிலிந்த் தியோரா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் முக்கிய நபராக அறியப்பட்ட மிலிந்த் தியோரா மனக்கசப்பின் காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார். இந்த நிலையில், மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள அவருக்கு மும்பை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வைப்பதென கட்சி மேலிடம் முடிவெடுத்தது. சிவசேனா (யுபிடி) கட்சியின் பொது செயலரும், உத்தவ் தாக்கரவின் மகனுமான ஆதித்ய தாக்கரே வோர்லி தொகுதியில் போட்டியிடுகிறார்....

டானா புயல்: ஒடிசாவில் 14 மாவட்டங்கள் கடும் பாதிப்பு; மேற்கு வங்கத்தில் ஒருவர் உயிரிழப்பு

வங்கக் கடலில் உருவான டானா புயல் நேற்று அதிகாலை ஒடிசாவில் கரையைக் கடந்தது. இந்த புயலின் பாதிப்பால் மேற்கு வங்கத்தில் ஒருவர் உயிரிழந்தார். கடந்த 19-ம் தேதி வங்கக் கடலின் அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, பின்னர் புயலாக மாறியது. டானா என்று பெயரிடப்பட்ட இந்த புயல் ஒடிசாவின் புரி மாவட்டம், மேற்கு வங்கத்தின் சாகர் தீவு இடையே வியாழக்கிழமை நள்ளிரவு முதல் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை...

உயர்கல்விக்காக குழந்தைகளை கனடாவுக்கு அனுப்பவேண்டாம்: பெற்றோருக்கு இந்தியத் தூதர் எச்சரிக்கை

உயர்கல்விக்காக தங்களது குழந்தைகளை கனடாவுக்கு அனுப்பவேண்டாம் என்று பெற்றோருக்கு கனடாவுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் வர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடாவில் கடந்த ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களால் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். அதில் சஞ்சய் வர்மாவையும், பிற இந்திய தூதரக அதிகாரிகளையும் கனடா தொடர்புபடுத்தியது. இந்தக் குற்றச்சாட்டுகளால் கடும் அதிருப்தி அடைந்த மத்திய அரசு, இந்தியாவில் இருந்து கனடா தூதர் மற்றும் அந்நாட்டின் 5 தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டதுடன், கனடாவில் இருந்து சஞ்சய் வர்மா மற்றும் 5...

கேரளாவின் திருச்சூரில் 108 கிலோ தங்கம் பறிமுதல்: ரகசியமாக நடந்த ஆபரேஷன் ‘தங்க கோபுரம்’

கேரள மாநிலம் திருச்சூரில் 78 தங்க நகை உற்பத்தி மையங்கள் மற்றும் மொத்த வியாபார கடைகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத 108 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவீதம் கேரள மாநிலத்துக்கு செல்கிறது. கேரளாவில் கடந்தாண்டு சுமார் 150 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசுக்கு செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை கணக்கிட்டால், குறைந்த அளவில் இருந்தது. கணக்கில் காட்டப்படாமல் தங்கம் விற்பனை செய்வது அதிகளவில் நடைபெறுவது தெரியவந்தது. இது குறித்த உளவுத் தகவலை...

பாபா சித்திக் கொலையில் லாரன்ஸின் சகோதரரும் குற்றவாளி

கடந்த அக்டோபர் 12-ம் தேதி தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக் கில் கைதாகி உள்ள 5 பேரில் ஒருவர், பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோ லுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் அவருடைய பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்குமுன், லாரன்ஸை போல் அன்மோலும் நடிகர் சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு பொறுப்பேற்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இந்த வழக்கில் 1,735 பக்க குற்றப்பத்திரிகை மும்பை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 14-ம் தேதி மும்பையில்,...

பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கு: கர்நாடகாவில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை

கர்நாடகாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களது வீடுகளை தீவைத்து கொளுத்திய வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனையும், 3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கங்காவதி அடுத்த மரகும்பி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (42). இவர் அங்குள்ள திரையரங்கில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு காட்சிக்கு டிக்கெட் எடுக்க வரிசையில் நின்றிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். ஆயுதங்களால் தாக்குதல் இதற்கு அப்பகுதியை சேர்ந்த...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...