Google search engine
Home 2024

Yearly Archives: 2024

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை ஜவுளி கடைகளில் குவிந்த மக்கள்: பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸார்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க நேற்று தி.நகர் உட்பட வணிக வீதிகளில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் சென்னையில் நேற்று 18 ஆயிரம் போலீஸார் கண்காணிபு பணியில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. நேற்று கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் புத்தாடை, நகை, பட்டாசு வாங்க வணிக வீதிகளில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் குவிந்தனர். குறிப்பாக தியாகராயநகர் ரங்கநாதன் தெரு, பாண்டிபஜார், பூக்கடை, வண்ணாரப்பேட்டை,...

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அடுத்த 3 மாதங்களில் ‘கலைஞர் நூலகம்’ – துணை முதல்வர் உதயநிதி தகவல்

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அடுத்த 3 மாதங்களுக்குள் ‘கலைஞர் நூலகம்’ திறக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்ட ‘என் உயிரினும் மேலான’ என்ற பேச்சுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதன்பிறகு, செய்தியாளர்களிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: திமுக இளைஞர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இளைஞர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தி, திராவிட கொள்கைகளுடன் கூடிய சிறந்த 100 தமிழ் பேச்சாளர்களை கண்டறிந்து தருமாறு முதல்வர் ஸ்டாலின்...

விஜய்யின் படையும்… கொள்கை முழக்கமும்! – தவெக மாநாடு ஹைலைட்ஸ்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கைக் திருவிழா’ என்ற பெயரில் நேற்று மாலை நடைபெற்றது. மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் 100 அடி கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஏராளமானோர் நேற்று முன்தினம் மாலை முதலே மாநாட்டு திடலை நோக்கி வரத்தொடங்கினர். காலை 7 மணி முதலே மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த 3 பிரதான நுழைவு வாயில்கள்...

நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பி. எஸ். என். எல். தொழிற்சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பி. எஸ். என். எல். பொது மேலாளர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊதியம் மற்றும் ஓய்வூதியம் மாற்றங்கள் தொடர்பாக உடனடி தீர்வு காண வேண்டும். 4 ஜி மற்றும் 5 ஜி சேவைகளை உடனடியாக தொடங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், வருங்கால வைப்பு நிதி மற்றும் இ. எஸ். ஐ. ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி...

நாகர்கோவிலில் கனமழையால் சுரங்கப்பாதை பணிகள் பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் இருந்து ஊட்டுவாழ் மடம் செல்வதற்கு ரயில்வே கேட் இருப்பதால் ரயில் செல்லும் நேரங்களில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதைத்தொடர்ந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வரும் நிலையில் சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குளச்சல்: மின்னல் தாக்கி உடைந்த கான்கிரீட் கூரை

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை  அடுத்து குளச்சலில் நேற்று நள்ளிரவு இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் பூலவிளை  பருதியில் மின்னல் தாக்கியதில்  இன்ஜினியர் வில்பிரட்டு (56) என்பவர் கான்கிரீட் வீடு மாடி கூரையில் ஓட்டை விழுந்தது. இந்த ஓட்டை வழியாக மழை நீர் புகுந்தது. மேலும் வீட்டில் உள்ள அனைத்து மின் சாதனங்களும் நாசமானது.      மேலும்  ஓட்டை விழுந்த மாடியில் ஜன்னல் திரையில் தீ பற்றி எரிந்தது. மேலும்  அதே பகுதியில் பதினைந்து மேற்பட்ட வீடுகளில் மின்விசிறிகள் ஏசி,...

மார்த்தாண்டம்: மேம்பாலத்தின் கீழ்பகுதி சாலை மீண்டும் சேதம்

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை நீண்ட காலமாக குண்டும் குழியுமாக காணப்பட்டது. எனவே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அழகு மீனா  மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களுக்கு முன் சீரமைப்பு நடைபெற்றது.       இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் சாலையில் உள்ள ஜல்லியும்...

கருங்கல்: பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு; 2 வருடம் சிறை

கருங்கல் அருகே உள்ள எட்டணியை சேர்ந்தவர்கள் ஜெயின் ராஜ் (32), சினேகராஜ் (28) நண்பர்கள். இருவரும் கட்டிடத் தொழில் செய்து வந்தனர். கடந்த 2008- ஜூன் மாதம் 7-ம் தேதி பைக்கில் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பி கொண்டு இருந்தபோது குறும்பனை ஜங்ஷன் பகுதியில் வைத்து பின்னால் வேகமாக வந்த பைக் வந்து ஜெயின்ராஜ் பைக் மீது பயங்கரமக மோதியது.         இதில் முன்னாள் சென்ற அரசு பஸ் மீது பைக் மோதி ஜெயின்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்....

மிட்செல் சாண்ட்னரின் சுழலில் சிக்கிய இந்திய அணி; 301 ரன்களுடன் நியூஸிலாந்து முன்னிலை | புனே டெஸ்ட் ஹைலைட்ஸ்

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 45.3 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கி 79.1 ஓவரில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டேவன் கான்வே 76, ரச்சின் ரவீந்திரா 65 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 11 ஓவர்களில் ஒரு விக்கெட்...

2 படங்களில் இருந்து விலகிய ஸ்ருதி ஹாசன்

2 படங்களில் இருந்து விலகிய ஸ்ருதி ஹாசன்நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர், ரஜினியின் மகளாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் ஒப்பந்தமாகி இருந்த 2 படங்களில் இருந்து திடீரென விலகியுள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ஆத்வி சேஷ் நடிக்கும் ‘டெக்காயிட்: எ லவ் ஸ்டோரி’ படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக ஒப்பந்தமாகி இருந்தார். இந்தப் படம் பான் இந்தியா முறையில் உருவாகிறது. இதன் டீஸரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், கதாபாத்திரத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இந்தப்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...