Home 2024
Yearly Archives: 2024
‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் மோசடி நபர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரதமர் மோடி எச்சரிக்கை
அரசு அதிகாரிகள் போல நடித்து, தனிப்பட்ட நபர்களின் செல்போனில் தொடர்பு கொண்டு போலியாக மிரட்டல் விடுக்கும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதுபோன்ற மோசடி நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி வாயிலாக மக்களுடன் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் 115-வது அத்தியாயம் நேற்று ஒலிபரப்பானது. இதில், பிரதமர் மோடி...
தீபாவளி வாரம் தொடங்கிய நிலையில் டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசம்: திணறும் மக்கள்
டெல்லியில் காற்றின் தரம் இன்றும் (திங்கள்கிழமை) மிக மோசமாக இருக்கிறது. தலைநகர் டெல்லி இந்தியாவிலேயே மிக மோசமான காற்றுமாசு கொண்ட நகரமாக அறியப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாகவே டெல்லிக்கு காற்று மாசு பெரும் சவாலாக இருக்கிறது.
இந்நிலையில், தீபாவளி வாரம் தொடங்கியுள்ள நிலையில் டெல்லியில் காற்றின் தரம் இன்றும் (அக்.28) மிக மோசமாக உள்ளது. கடந்த 24 மணி நேர சராசரியின்படி இன்று காலை 6 மணியளவில் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 264 என்றளவில் இருந்தது. இது முந்தைய பதிவோடு ஒப்பிடுகையில் 90...
விஜய் கட்சிக் கொள்கை எங்களது கொள்கைக்கு நேரெதிரானது: சீமான் கருத்து
விஜய் கட்சிக் கொள்கை எங்களது கட்சிக் கொள்கைக்கு நேரெதிரானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கின. கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையில் விஜய் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர், கொள்கைகளை விளக்கி விஜய் பேசினார். அப்போது அவர், “கொள்கை கோட்பாட்டு அளவில்...
பிரிவினைவாதம், ஊழலை ஒழிக்க வேண்டும்; கூட்டணி சேருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு: தவெக மாநாட்டில் விஜய் அறிவிப்பு
பிரிவினைவாதம், ஊழல் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறுவோம். நம் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கின. கட்சியின் பொருளாளர்...
தமிழகத்தில் சில இடங்களில் நவ.2 வரை மழை
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அக். 27-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 8 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி, தக்கலை ஆகிய இடங்களில் 7 செ.மீ., நாகர்கோவில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளை ஆகிய இடங்களில் 5 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர், பேச்சிப்பாறை, மற்றும் தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென்னிந்திய...
தமிழகம் முழுவதும் இன்றுமுதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்: கிளாம்பாக்கத்தில் அமைச்சர்கள் ஆய்வு
தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் 28-ம் தேதி (இன்று) முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஏற்கெனவே அறிவித்துள்ளார். அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 4,900 சிறப்பு பேருந்துகள், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 2,910 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறைநடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இன்று வழக்கமான பேருந்துகளுடன் சென்னையில் இருந்து 700 பேருந்துகளும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பிற முக்கிய பகுதிகளுக்கு...
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி; ஆளுங்கட்சி அத்துமீறலை தடுக்க வேண்டும்: அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நாளை (அக்..29) நடைபெற உள்ளது. இப்பணியில் ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் தெரியவந்தால் அதைத் தடுக்க அதிமுகவினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, அடுத்த ஆண்டுஜன.1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி நடைபெற உள்ளது. அதன்படி வரைவு வாக்காளர் பட்டியல் நாளை (அக்.29) வெளியிடப்படுகிறது. நவ.28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலை திருத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு...
மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு அவசர கூட்டம் நடத்த ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு அவசரக் கூட்டம் நடத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், நடுக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்களில் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன், ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்து சென்றுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தொடர்ந்து நீடிப்பது கண்டிக்கத்தக்கது.மீனவர்கள் பிரச்சினை தொடரக்கூடாது. எனவே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இலங்கை...
சென்னை தீவுத்திடலில் தீபாவளி பட்டாசு விற்பனை சூடுபிடித்தது
தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் ஆர்வமாக கார்களிலும், இருசக்கர வாகனங்களிலும் திரளாக தீவுத்திடலுக்கு வந்தனர்.
அதனால் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பெரியதும் சிறியதுமான பட்டாசு நிறுவனங்கள் தீவுத்திடலில் ஸ்டால்கள் அமைத்திருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் பட்டாசுகள் வாங்கும் நிலை உள்ளது.
சில்லறை விலையில் மட்டுமல்லாமல் மொத்தமாகவும் பட்டாசுகளை வாங்க முடிகிறது. பட்டாசு கிப்ட் பாக்ஸ் அதிகமாகவே இ்ந்தாண்டு விற்பனைக்கு வந்துள்ளது.
கம்பி மத்தாப்பூ, பூச்சட்டி, சாட்டை, தரைச்சக்கரம், பயர் பென்சில்ஸ்,...
சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் திட்டத்தில் மேம்பாட்டு பணிகள் தீவிரம்
அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின்கீழ், சென்னை ரயில்வே கோட்டத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இந்தப் பணிகளை அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 1,309 ரயில் நிலையங்கள் படிப்படியாக மேம்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேயில் 116 நிலையங்கள் மேம்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 25 ரயில் நிலையங்களும், இரண்டாவது கட்டமாக 44 ரயில் நிலையங்களும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, தேர்வு செய்யப்பட்ட ரயில் நிலையங்களில்...














