Google search engine
Home 2024

Yearly Archives: 2024

ட்ரீசா – காயத்ரி ஜோடி முதல் சுற்றில் தோல்வி

ஜப்பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்டர் ஜப்பான் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி, தர வரிசையில் 24-வது இடத்தில் உள்ள சீன தைபேவின் ஹிஸு யின்-ஹுய், லின் யின்-ஹு ஜோடியை எதிர்த்து விளையாடியது. 36 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள ட்ரீசா - காயத்ரி ஜோடி 16-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவில்...

3-வது டி20 ஆட்டத்தில் இன்று மோதல்: பதிலடி தரும் முனைப்பில் இந்திய அணி

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன் நகரில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. டர்பன் நகரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து கெபர்ஹாவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பதிலடி கொடுத்தது. 125 ரன்கள் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி...

பெர்த் ஆடுகளத்தில் பந்துகள் எகிறும்: வடிவமைப்பாளர் மெக்டொனால்டு தகவல்

இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட்ஆட்டங்கள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய அணி எந்தவித பயிற்சி ஆட்டங்களிலும் பங்கேற்காமல் நேரடியாக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் ஆப்டஸ் மைதானத்தின் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளதாக மேற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் தலைமை ஆடுகள வடிவமைப்பாளர் ஐசக் மெக்டொனால்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்...

ஹிஸ்புல்லா மீதான தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் அறிவிப்பு

லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ராணுவத்துக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள்கிழமை ஹிஸ்புல்லா தீவிரவாதிகள், இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து 165 ஏவுகணைகளை வீசினர். இதில் பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் நடுவானில் அழித்தது. சில ஏவுகணைகள் இஸ்ரேலின் பினா நகரில் விழுந்தன. இதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் நேற்று அதிகாலை முதல் லெபனான் தலைநகர்...

அல்-காய்தாவுக்கு நிதியுதவி வழங்கியது தொடர்பாக 6 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

அல்-காய்தா தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கிய விவகாரம் தொடர்பாக கர்நாடகா உட்பட 6 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். அண்டை நாடான வங்கதேசத்தில் செயல்படும் அல்-காய்தா தீவிரவாதிகள் இந்தியாவில் கால் ஊன்ற முயற்சி மேற்கொள்வதாகவும், அல்-காய்தாவுக்காக இந்தியாவில் நிதி திரட்டி வருவதாகவும் உளவுத் துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகா, மேற்குவங்கம், பிஹார், திரிபுரா, அசாம், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த 9 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று...

உத்தவ் தாக்கரே பைகள் சோதனை வழக்கமானது: தேர்தல் ஆணையம் தகவல்

மகாராஷ்டிராவின் யவத்மால் விமான நிலையத்தில் உத்தவ் தாக்கரே பைகளை சோதனையிட்டது வழக்கமான நடைமுறை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், “தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் உத்தவ் தாக்கரேவின் பைகள் கடந்த 2 நாட்களில் 2 முறை சோதனை செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்...

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் காங்.சார்பில் 9 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டி: அஜித் பவாரின் என்சிபி 5 பேருக்கு வாய்ப்பு

சட்டப்பேரவை தேர்தலுக்கு மகாராஷ்டிரா தயாராகி வரும் நிலையில் முஸ்லிம் வேட்பாளர்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. இங்கு மொத்தப் போட்டியாளர்களில் 10% மட்டுமே முஸ்லிம்கள். மொத்தம் 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு போட்டியிடும் 4,136 வேட்பாளர்களில் 420 பேர் மட்டுமே முஸ்லிம்கள். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (218 பேர்) சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர். பிரதான கட்சிகள் முஸ்லிம்கள் சிலரையே களமிறக்கியுள்ளன. காங்கிரஸ் 9 முஸ்லிம் வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளது. அதே நேரத்தில் பாஜக யாரையும் நிறுத்தவில்லை. என்றாலும்...

தேர்தல் நடத்தை விதி மீறல் புகார்: ராகுல், கார்கே மீது வழக்கு பதிவு செய்ய பாஜக வலியுறுத்தல்

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரச்சார பொதுக் கூட்டங்களில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி வருவதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. மேலும், அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: பாஜகவுக்கு எதிராக தீங்கிழைக்கும் உள்நோக்கத்துடன் அவதூறான பிரச்சாரங்களை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வருகிறது. தேர்தல் சட்டங்கள், நடத்தை விதிமுறைகளை தொடர்ந்து அக்கட்சி மீறி வருகிறது. பாஜகவும், ஆர்எஸ்எஸ்...

திருமலையில் வரும் 17-ல் கார்த்திகை வன போஜனம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலையில் வரும் 17-ம் தேதி கார்த்திகை வனபோஜன உற்சவம் நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வனபோஜன உற்சவத்தை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு வரும் 17-ம் தேதி இந்த உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை சிறிய கஜவாகனத்தில் மலையப்பர் பார்வேட்டை மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்படுவார். இதுபோல் ஒரு பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவியும் ஊர்வலமாக வருவர். அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சன நிகழ்ச்சிகள் காலை 10 மணி...

முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு திட்டம் இல்லை: கர்நாடக முதல்வர் சித்தராமையா விளக்கம்

கர்நாடகாவில் வேலை வாய்ப்பில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் இல்லை என அம்மாநில முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். கர்நாடகாவில் முஸ்லீம்களுக்கு அரசு வேலை வாய்ப்பு மற்றும் ஒப்பந்தங்கள் ஒதுக்கீடு செய்வதில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த நடவடிக்கையை விமர்சித்தார். அப்போது அவர் பேசுகையில், "காங்கிரஸ் அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக மத ரீதியாக‌ இடஒதுக்கீடு வழங்க திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவிலும், மகாராஷ்டிராவிலும்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...