Google search engine
Home 2024

Yearly Archives: 2024

மகாராஷ்டிர தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெற்றாலும முதல்வர் பதவிக்கு போட்டி ஏற்பட வாய்ப்பு

மகாராஷ்டிராவில் 288 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் மகா யுதி மற்றும் எதிர்க்கட்சிகளின் எம்விஏ கூட்டணிக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரு கூட்டணியிலும் முதல்வர் வேட்பாளர் முன்னிறுத்தப்படவில்லை. இச்சூழலில், இரண்டு கூட்டணிகளிலும் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சித் தலைவர்கள் முதல்வர் பதவிக்கு குறி வைத்துள்ளனர். எனினும், எம்விஏ கூட்டணியில் சிவசேனாவின் (யூபிடி) உத்தவ் தாக்கரேவும், மகா யுதியில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவும் முதல்வர் வேட்பாளர்கள் எனப் பொதுவான கருத்து நிலவுகிறது. இந்நிலையில், தேர்தல்...

ஜம்மு-காஷ்மீர் என்கவுன்ட்டரில் உயிரிழந்த ராணுவ அதிகாரி ராகேஷ் குமாரின் உடலுக்கு இமாச்சல் மக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜம்மு-காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த என்கவுன்ட்டரில் ராணுவ அதிகாரி ராகேஷ் குமார் உயிரிழந்தார். இவரது உடல் அவரது சொந்த ஊரான இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள பரோங் கிராமத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அப்போது அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியிருந்தது. ஜெய் ஹிந்த் என உணர்ச்சி பொங்க கோஷங்களை எழுப்பியதுடன் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் ராகேஷ் குமாரின் உடலுக்கு கண்ணீருடன் இறுதி மரியாதை செலுத்தினர். மழையால் சேதமடைந்த வீட்டை மீண்டும் கட்ட வேண்டும்...

ஜார்க்கண்டில் இன்று முதல்கட்ட தேர்தல்: 43 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்கு பதிவு

ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேர வைக்கு முதல் கட்டமாக இன்று 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் அடங்கிய இண்டியா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜேஎம்எம் கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். இந்த சட்டப்பேரவையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம்...

வயநாட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது: பிரியங்கா காந்தியின் தேர்தல் அரசியலுக்கு பரீட்சை!

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு இன்று (நவ.13) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அப்போது வாக்காளர்கள் வருகை மிதமாக இருந்தது. வயநாடு தான் பிரியங்கா காந்திக்கு தேர்தல் அரசியல் பிரவேசம் என்பதால் இத்தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வயநாட்டின் சுல்தான் பத்தேரி, கல்பேட்டா, மானந்தவாடி, மலப்புரம் மாவட்டத்தின் எரநாடு, நீலாம்பூர், வாண்டூர், கோழிக்கோட்டின் திருவம்பாடி என வயநாடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டு இந்த மூன்று மாவட்டங்களில் 7 சட்டப்பேரவை தொகுதி பிரிவுகள்...

சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி: 27-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது

இண்டர்நேஷனல் இன்ஜினியரிங் சோர்சிங் ஷோ என்று அறியப்படும் சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சியின் 12-வது பதிப்பு இம்மாதம் 27-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் (இஇபிசி) தலைவர் அருண் கரோடியா கூறியதாவது: சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி நவம்பர் 27, 28 மற்றும் 29 தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மிகப்பெரிய அளவில் பங்களி்ப்பு செய்யும் இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு. அதேபோல், மிகப்பெரிய அளவில் ஏற்றுமதி செய்வதில்...

கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது பதிவு துறை வருவாய் ரூ.1,222 கோடி அதிகம்

பதிவுத்துறை வருவாய் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது அக்டோபர் மாதம் வரை ரூ.1,222 கோடி அதிகரித்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும், பத்திர பதிவுக்காக சுபமுகூர்த்த தினங்களான நவ.14, 15 தேதிகளில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்தாண்டு அக்டோபர் மாதத்துக்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் , மாவட்ட வருவாய் அலுவலர்கள், தனித்துணை ஆட்சியர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் பி.மூர்த்தி தலைமயைில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பேசியதாவது: பதிவுத் துறையில் கடந்த 2023-24-ம்...

வைஜெயந்திமாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: ஐடிஎம் பல்கலைக்கழகம் சென்னையில் வழங்கியது

பழம்பெரும் திரைப்பட நடிகையும் பரதக் கலைஞருமான வைஜெயந்திமாலா பாலிக்கு, ஐடிஎம் பல்கலைக்கழகம் வாழ்நாள் சாதனையாளருக்கான கவுரவ டாக்டர் பட்டத்தை சென்னையில் வழங்கியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் நகரத்தில் உள்ள தனியார் உயர்கல்வி நிறுவனம் ஐடிஎம் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா வரும் நவம்பர் 23-ம்தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது. வைஜெயந்திமாலா பாலி, மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல், மத்தியப் பிரதேசகல்வி அமைச்சர் இந்தர் சிங் பர்மர், ஐடிஎம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ருச்சி சிங், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அபிநவ்...

2026-27-ம் ஆண்டு தமிழகத்தின் தினசரி மின்தேவை 23,013 மெகாவாட்டாக அதிகரிக்கும்: மத்திய மின்சார ஆணையம் மதிப்பீடு

தமிழகத்தில் தினசரி மின்தேவை வரும் 2026-27ம் ஆண்டு 23,013 மெகாவாட்டாக அதிகரிக்கும் என மத்திய மின்சார ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது. தமிழகத்தில் தற்போது தினசரி மின்தேவை 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. புதிய மின்இணைப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆண்டுதோறும் மின்நுகர்வு அதிகரிக்கிறது. கோடைக் காலத்தில் வீடு, அலுவலகங்களில் ஏசி, மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகம் இருக்கும் என்பதால், ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் மின்தேவை உச்ச அளவை எட்டி வருகிறது. இந்தாண்டு மே 2-ம் தேதி எப்போதும் இல்லாத வகையில் 20,830...

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.100 கோடியில் நந்தவனம் பாரம்பரிய பூங்கா: தமிழக சுற்றுலா துறை அமைக்கிறது

மத்திய அரசின் நிதியுதவியுடன், தமிழக சுற்றுலா துறை, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் ரூ.100 கோடி செலவில் நந்தவனம் பாரம்பரிய பூங்கா என்ற பிரத்யேக பூங்காவை அமைக்க இருக்கிறது. தமிழக அரசின் சுற்றுலா துறை சார்பில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கோவளம் அருகே 223 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடி செலவில் நந்தவனம் பாரம்பரிய பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. மத்திய அரசின் நிதியுதவியுடன் உருவாக்கப்படும் இந்த பூங்காவில் சோலை வனம், விஹாரம், மைதானம் என 3 பிரிவுகள் இடம்பெறும். இங்கு 2 நட்சத்திர...

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இந்தியவானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நேற்று முன்தினம் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தற்போது வடதமிழகம், தெற்கு ஆந்திரகடற்கரை பகுதிக்கு அப்பால் நிலவுகிறது. கனமழை வாய்ப்பு: இதன் காரணமாக இன்று...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...