Google search engine
Home 2024

Yearly Archives: 2024

வன்னியூர்: குழந்தை இல்லாததால் ராணுவ வீரர் தற்கொலை

வன்னியூர் பகுதியை சார்ந்தவர் சுந்தரேசன் மகன் ஸ்டாலின் ஜோஸ் (40). இவர் ராணுவ வீரராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு குழந்தை இல்லை.  இதனால் மன வருத்தத்தில் மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவியை அடித்து வீட்டிற்கு வெளியே துரத்தியுள்ளார். வீட்டின் கதவினை அடைத்து வைத்து விட்டு தூக்கில் தொங்கியுள்ளார். நேற்று (12-ம் தேதி) காலை தகப்பனார் சுந்தரேசன் வந்து கதவினை தட்டியுள்ளார். கதவு திறக்கவில்லை  இதனால்...

அருமனை: சாலையில் கிடந்த 10 அடி நீள பாம்பு

அருமனை அருகே கடையல், ஆம்பாடி பகுதி மலைப்பாங்கான பகுதியாகும். இந்த பகுதியில் அங்குள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அருகே இன்று (நவம்பர் 12) காலை மலைப்பாம்பு ஒன்று சுருண்டுபடுத்து கிடந்தது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து, அவர்கள் உடனடியாக களியல் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக வனத்துறையினர் சம்பவ இடம் வந்தனர்.  அதற்குள் பாம்பு அங்கிருந்து ஊர்ந்து சாலையோரம் சென்றது. ஆனால் நகர முடியாமல் அங்கே படுத்துவிட்டது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வனத்துறையினர் லாவகமாக மலைப்பாம்பை பிடித்தனர். அந்த...

திருவட்டாறு: பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடியாததால் பயணிகள் அவதி

திருவட்டாறில் பஸ் ஸ்டாண்ட் ரூ. 2.55 கோடி செலவில் கட்டும் பணி 2023 பிப்ரவரி மாதம் துவங்கியது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைய வேண்டிய பணி இன்னும் முடியவில்லை.  இதனால் பஸ் ஏறச்செல்லும் மக்கள் ரோட்டின் இரு பகுதியிலும் நெருக்கடியான நிலையில் பஸ்களுக்கு காத்துநிற்கின்றனர். எந்த வித நிழற்குடையோ, இருக்கையோ இல்லாததால் வெயில், மழையின்போது மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சாலையோரம் தனியார் மது பார் அமைந்துள்ளதால் குடிமகன்களின் அட்டகாசத்தால் பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் பஸ்ஸ்டாண்ட் பணிகளை முடித்து மக்கள்...

கருங்கல்: பைக் திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது

கருங்கல் அருகே உள்ள கப்பியறை பகுதியை சேர்ந்தவர் அருண் ஸ்ரீதரன் (32) கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தி விட்டு சென்றார். நேற்று அதை காணவில்லை. மாறாக அந்த இடத்தில் வேறு ஒரு மோட்டார் சைக்கிள் நின்றது.  இது குறித்து அருண் ஸ்ரீதரன் கருங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று (12-ம் தேதி) குளச்சல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட்...

‘லாஸ்ட் லேடீஸ்’ ஆனது லாபதா லேடீஸ்!

97-வது ஆஸ்கர் விருது விழா, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கிறது. இந்த விருதின் சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவுக்கு இந்தியா சார்பில் ஒவ்வொரு வருடமும் அதிகாரப்பூர்வமாக ஒரு படம் பரிந்துரைக்கப்படுவது வழக்கம். இந்த வருடம், ஆமிர்கான் தயாரிப்பில் அவரின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கிய ‘லாபதா லேடீஸ்’ என்ற இந்திப் படத்தை அனுப்புவதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு, சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. இந்நிலையில் சர்வதேச பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில் இந்தப் படத்தின் பெயர் ‘லாஸ்ட் லேடீஸ்’ என மாற்றப்பட்டுள்ளது. இது...

கங்குவா படத்துக்கு தடை கோரி குவியும் வழக்குகள்: ரூ.20 கோடியை செலுத்த ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு உத்தரவு

நடிகர் சூர்யா நடித்துள்ள 'கங்குவா’ படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரி்த்துள்ளது. நாளை (நவ.14) வெளியாகும் இந்தப் படத்துக்கு தடை கோரி ஏற்கெனவே ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதில், ரூ.99 கோடி கடனாக கொடுத்த நிலையில் ரூ.54 கோடி பாக்கியுள்ளதாக தெரிவித்திருந்தது. உயர் நீதி்மன்ற உத்தரவுப்படி அந்நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.54 கோடியை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் செலுத்தியது. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் இறந்து விட்டதால் அவருடைய சொத்துக்களை சென்னை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து...

டவுன் பஸ்: நடத்துநராக அசத்திய அஞ்சலி தேவி!

‘நவசக்தி’ என்ற நாடகக்குழு மூலம் 1940 மற்றும் 50-களில் நாடகங்கள் நடத்தி வந்தவர் என்.என்.கண்ணப்பா. இவர், மு.கருணாநிதியின் முற்போக்கு வசனங்களால் பேசப்பட்ட ‘தேவகி’ (1951) படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதில் நாயகியாக நடித்தவர் வி.என்.ஜானகி. தொடர்ந்து ‘மனிதனும் மிருகமும்’, ‘நால்வர், ‘படித்த பெண்’ உட்பட பல படங்களில் நடித்தார். அவர் நடித்து ஹிட்டான படங்களில் ஒன்று, ‘டவுன் பஸ்’. இதில் அஞ்சலி தேவி கதாநாயகியாக நடித்தார். எம்.என்.ராஜம், டி.பி.முத்துலட்சுமி, கே.எஸ்.அங்கமுத்து, வி.கே.ராமசாமி, ஏ.கருணாநிதி, டி.கே.ராமச்சந்திரன், பி.டி.சம்பந்தம், தாம்பரம் லலிதா என பலர் நடித்தனர். ‘நால்வர்’...

“10 ஆண்டுகளே சினிமாவில் இருப்பேன்” – ஆமீர்கான் அறிவிப்பு

“இந்த 10 வருடங்கள் என்னுடைய சினிமா வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளாக இருக்கும். 6 படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளேன். இந்த காலக்கட்டத்தில் சிறந்த இயக்குநர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்களுடன் பயணிக்க விரும்புகிறேன்” என பாலிவுட் நடிகர் ஆமீர்கான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “லால் சிங் சத்தா படத்துக்கு முன்பே நான் திரைத் துறையிலிருந்து விலக முடிவு செய்துவிட்டேன். அப்போது நான் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பயணத்தில் இருந்தேன். கரோனா காலத்தில் தான், நான் ஒன்றை உணர்ந்தேன். அதாவது என்னுடைய 18 வயது தொடங்கி...

நினைக்க தெரிந்த மனங்களின் மறக்கமுடியாத பாடகர் பி.சுசிலா!

தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கோயில் திருவிழாக்கள் துவங்கி அப்பகுதி மக்களின் சுகதுக்கங்களில் ஒன்றென கலந்திருந்தது பேண்டு இசைக் குழுக்கள். ஓர் இசைக்குழுவில் 12 முதல் 15 பேர் வரை இருப்பர். கிளாரிநெட் தான் இந்த பேண்டு இசைக் குழுக்களின் பிரதானமான இசைக்கருவி. இதற்கு இணையாக சாக்ஸபோன், ட்ரெம்பெட், இபோனியம் உள்ளிட்ட இசைக்கருவிகள் சப்போர்டிங்காக இசைக்கப்படும். இவை அனைத்துமே மேற்கத்திய இசைக்கருவிகள். தாளத்தைப் பொறுத்தவரை சைட் டிரம், டோல், பேஸ் டிரம், டாம் டாம், மொராகோஸ் இடம்பெற்றிருக்கும். தஞ்சை பேண்டு இசைக்குழுக்களின் தனிச்சிறப்பே...

போபண்ணா ஜோடி முதல் ஆட்டத்தில் தோல்வி

ஏடிபி பைனல்ஸ் தொடர் இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி தங்களது முதல் ஆட்டத்தில் இத்தாலியின் சிமோன் பொலேலி, ஆண்ட்ரியா வவஸ்சோரி ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் போபண்ணா - எப்டன் ஜோடி 2-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டம் 56 நிமிடங்கள் நடைபெற்றது. போபண்ணா - எப்டன் ஜோடி தங்களது அடுத்த ஆட்டத்தில் எல் சால்வடோரின் மார்செலோ அரேவலோ, குரோஷியாவின் மேட் பாவிக்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...