Google search engine
Home 2024

Yearly Archives: 2024

சென்னை அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் மீது கொடூர தாக்குதல்: நடந்தது என்ன?

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச் செல்ல முயன்ற அவரை பணியாளர்கள், பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அந்த இளைஞரை கைது செய்த போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சென்னை தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பிரேமா. இவரது மகன் விக்னேஷ் (25). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரேமா கடந்த 6 மாதங்களாக சென்னை கிண்டியில் உள்ள...

தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வங்கக்கடல், அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம், டெல்டா உட்பட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடதமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் கேரள கடலோர பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும், நாளையும் (நவ.14, 15) பெரும்பாலான இடங்களிலும் 16-ம் தேதி ஒருசில இடங்களிலும்...

திருக்குறளில் மேலாண்மை கருத்துகள் குறித்த ‘யெஸ் பாஸ்’ இந்தி நூல் வெளியீட்டு விழா

திருக்குறளில் காணப்படும் மேலாண்மைக் கருத்துகள் குறித்த ‘யெஸ் பாஸ்’ எனும் இந்தி நூல் வெளியீட்டு விழா திருச்சி ஐஐஎம் வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்திய மேலாண்மைக் கழக இயக்குநர் பவன் குமார் சிங் நூலை வெளியிட்டு பேசும்போது, ‘‘மேலாண்மையில் குறள்கள் பற்றிய 60 கட்டுரைகளே இவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்போது, 1,330 குறள்களையும் படித்து விட்டால் எவ்வளவு நன்மை அடையலாம் என்பது புரிகிறது’’ என்றார். முதல் பிரதியை பெற்றுக் கொண்டு, இந்தி எழுத்தாளர் திலிப் டிங்க் பேசும்போது, ‘‘நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் நமது...

சென்னையில் அதிக மழை பெய்தாலும் சமாளிக்க தயார்: அமைச்சர் கே.என்.நேரு உறுதி

சென்னையில் எவ்வளவு அதிக மழை வந்தாலும், அதை சமாளிக்க மாநகராட்சி தயாராக உள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் ஓட்டேரி நல்லா மற்றும் விருகம்பாக்கம் கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் கடந்த அக்.1 முதல் நவ.12-ம் தேதி வரை 43 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்று 2.6 செ.மீ. பதிவாகியுள்ளது. இந்த மழையால் இதுவரை எந்த இடத்திலும் மழைநீர் தேக்கம் இல்லை....

அடையாறு ஆற்றில் நண்டு பிடிக்க மனைவியுடன் இறங்கியவர் 4 மணி நேரத்துக்கு பின் மீட்பு

நண்டு பிடிக்க மனைவியுடன் சென்றவர் அடையாறு ஆற்றின் நடுவே சிக்கிக் கொண்டார். அவரை தீயணைப்பு படையினர் மற்றும் மெரினா மீட்பு குழுவினர் படகு மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதிகேசவன் (48). இவர் அவரது மனைவி செல்வி மற்றும் மகனுடன் கடந்த 2 ஆண்டுகளாக அடையாறு பகுதியில் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளார். வேலை இல்லாத நேரத்தில் குடும்பத்துடன் பட்டினப்பாக்கம் அருகே உள்ள அடையாறு முகத்துவாரத்தில் நண்டு மற்றும் மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் மாலை ஆதிகேசவன்...

தமிழக அரசை கண்டித்து அதிமுக நவ.19-ம் தேதி ஆர்ப்பாட்டம்: செங்கை பதுவஞ்சேரியில் நடக்கிறது

சிஎம்டிஏ மூலமாக 600 ஏக்கர் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி அதிமுக சார்பில் செங்கல்பட்டு அடுத்த பதுவஞ்சேரியில் வரும் நவ.19-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாடம்பாக்கம் பகுதியில் சுமார் 520 ஏக்கர், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் தென் ஊராட்சியில் சுமார் 22 ஏக்கர், மதுரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கோயிலாஞ்சேரி கிராமத்தில் சுமார் 58 ஏக்கர் என மொத்தம்...

திருவொற்றியூர் தனியார் பள்ளி மீண்டும் திறப்பு

திருவொற்றியூரில் உள்ள விக்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக்டோபர் 25-ம் தேதியும், நவம்பர் 4-ம் தேதியும் வாயு கசிவு ஏற்பட்டு மாணவிகளுக்கு மயக்கம், மூச்சு திணறல் ஏற்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தியும் காரணம் தெரியவில்லை. இதையடுத்து, பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், பெற்றோருடன் வருவாய் கோட்டாட்சியர் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, பள்ளி நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவிகள் மட்டும் வந்தனர். படிப்படியாக இதர மாணவிகளுக்கு...

தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்!

மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் செந்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து, நவ.14-ம் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. அவசர சிகிச்சையை தவிர்த்து அனைத்து விதமான மருத்துவ சேவைகளையும் நிறுத்துவதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம்...

நித்திரவிளை: 75 பாக்கெட் குட்கா புகையிலை பறிமுதல்

நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியை  சேர்ந்தவர் சதீஷ்குமார் (46). பழக்கடை நடத்தி வருகிறார். இவர் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர்களுக்கு குட்கா விற்பனை செய்வதாக நித்திரவிளை  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று (நவ.,11) மாலை சதீஷ்குமார் பழக்கடையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 75 பாக்கெட் குட்கா புகையிலை பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்து சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

நாகர்கோவிலில் காண்ட்ராக்டர் வெட்டப்பட்ட வழக்கில் பெண் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காண்ட்ராக்டர் ஈஸ்வரன் அரிவாளால் வெட்டப்பட்டார். சம்பவம் தொடர்பாக, பெண் ஒருவர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் ஈஸ்வரன் வெட்டப்பட்ட வழக்கில் முக்கூடலைச் சேர்ந்த பழனியாச்சி ( வயது 40) என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...