Google search engine
Home 2024

Yearly Archives: 2024

மதரசாவை இடம் மாற்றுவதற்கு தவணையில் லஞ்சம் வாங்கிய உ.பி. அதிகாரி கைது

உ.பி.யில் தவணை முறையில் லஞ்சம் வாங்கிய மாநில சிறு பான்மையினர் நலத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். உ.பி.யில் பரேலி மாவட்டம் தானா பஹேடி கிராமத்தை சேர்ந் தவர் ஆரிஷ். இவர் ராஜ்புரா என்ற இடத்தில் இருந்து வசுந்தரா கிராமத்திற்கு மதரசாவை மாற்றுவது தொடர்பாக பரேலியில் உள்ள மாநில சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தார். இது தொடர்பான கோப்பு 6 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, பரேலி சிறுபான்மையினர் நலஅலுவலகத்தில் சீனியர் அசிஸ்டென்ட் ஆக பணியாற்றி வந்த முகம்மது ஆசிப் என்பவரை சந்தித்தார். அப்போது உரிய நடைமுறை...

ஹரியானாவில் அரசியலமைப்பு அருங்காட்சியகம்: பார்வையாளர்களுக்கு உதவ ஐஐடி தயாரித்த வழிகாட்டி ரோபோ

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஓ.பி.ஜிண்டால் சர்வதேச பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் அரசியலமைப்பு அருங்காட்சியகத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வரும் 26-ம் தேதி திறந்துவைக்கிறார். இந்த அருங்காட்சியகத்துக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு உதவுவதற்காக சென்னை ஐஐடி உருவாக்கியுள்ள அதிநவீன வழிகாட்டி ரோபா சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஓ.பி.ஜிண்டால் சர்வதேச பல்கலைக்கழகம் ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் அரசியலமைப்பு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய...

வீடுகளை இடிப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது: உ.பி. புல்டோசர் இடிப்பு வழக்கில்  உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

உத்தரப்பிரதேசத்தில் கட்டிடங்கள் புல்டோசர் மூலம் இடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் வீடுகளை இடிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என கருத்து தெரிவித்துள்ளது. மேலும் ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை இடிக்கும்போது, 15 நாட்களுக்கு முன்பாகவே நோட்டீஸ் வழங்கியிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பாக...

ஜார்க்கண்ட் முதல்கட்ட தேர்தலில் 64.86% வாக்குப்பதிவு

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தேர்தலில் 64.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 13, 20-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 43 தொகுதிகளில் மொத்தம் 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் மற்றும் முன்னாள் எம்.பி. கீதா கோரா உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை 7 மணிக்கு 43...

சென்னை உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோர மறுத்த அர்ஜுன் சம்பத் மகன் கைது

கோவை ஈஷா யோகா மையம் தொடர்பாக அவதூறு பரப்பியதாக வார இதழ் ஒன்றைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கோவையில் கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அர்ஜுன் சம்பத் மகனும், கட்சியின் இளைஞரணித் தலைவருமான ஓம்கார் பாலாஜி, வார இதழ் ஆசிரியரை மிரட்டும் தொனியில் பேசியதாக திமுகவைச் சேர்ந்த அப்துல் ஜலீல் புகார் அளித்தார். இதன் பேரில் ஓம்கார் பாலாஜி மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இதில் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த...

கோயில் பூசாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தம்பி விடுதலை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் நாகமுத்து (22). கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பூசாரியாகப் பணிபுரிந்து வந்த நாகமுத்து 2012-ல் தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக, தனது தற்கொலைக்கு கோயில் அறங்காவலர்களாக இருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, லோகு, சரவணன், ஞானம், மணிமாறன், சிவக்குமார், பாண்டி ஆகிய 7 பேர் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார். பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் அளித்த புகாரின்பேரில், ஓ.ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது தென்கரை போலீஸார் வழக்கு பதிவு...

கத்திக் குத்து சம்பவம்: துணை முதல்வர் உதயநிதி காரை முற்றுகையிட்ட மருத்துவர்கள்

மருத்துவமனையில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தை தொடர்ந்து, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “இச்சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரிக்கப்படும். கைதான இளைஞர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர் களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதியாக வழங்க வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார். பின்னர் அங்கிருந்து உதயநிதி புறப்பட முயன்றபோது, அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள் அவரது...

ஆசிரியர்களின் குற்றப் பின்னணி குறித்து விசாரிப்பது தொடர்பாக விரைவில் உரிய உத்தரவு: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

ஆசிரியர்களின் குற்றப் பின்னணி குறித்து விசாரிப்பது தொடர்பாக விரைவில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக பதியப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், போலி என்சிசி முகாம் நடத்தியதாகக் கூறப்படும் மேலும் மூன்று பள்ளிகளில் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட...

10 வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி: முதல்வர் வழங்கினார்

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உயிரிழந்த வழக்கறிஞர்களின் வாரிசுகளுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கில் நிறுவப்பட்ட தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியம், தமிழகம், புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் இருந்து பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசால், ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு வழக்கறிஞர் நல நிதியத்தில் இருந்து, உயிரிழந்த 10 வழக்கறிஞர்களின் வாரிசுகளுக்கு நிதியுதவியாக தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.1 கோடிக்கான காசோலை களை முதல்வர் ஸ்டாலின் நேற்று...

பவுர்ணமி, வார கடைசி நாட்களில் சென்னையில் இருந்து 1,152 சிறப்பு பேருந்துகள் 

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நவம்பர் 15 (நாளை) பவுர்ணமி, அதைத் தொடர்ந்து நவ.6, 17 (சனி, ஞாயிறு) வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறை வருகின்றன. இதை கருத்தில் கொண்டு, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம்,ஈரோடு, திருப்பூருக்கு நவ.15, 16-ம் தேதிகளில் 705 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர்,பெங்களூருவுக்கு 81 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. பவுர்ணமியை முன்னிட்டு...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...