Google search engine
Home 2024

Yearly Archives: 2024

கிரிக்கெட் பயிற்சியில் என்ன ரகசியம்? – இந்திய அணி நிர்வாகத்தை விமர்சித்த ஆஸி. ஊடகம்

பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான பயிற்சியில் இந்திய அணியினர் பழைய பெர்த் ஸ்டேடியமான ‘வாக்கா’வில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயிற்சி அமர்வுக்கு செய்தியாளர்கள் அனுமதிக்கக் கூடாது என்று கண்டிப்பான அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வாக்கா மைதானம் மறுகட்டுமான ஒப்பந்தத்தை எடுத்துள்ள கட்டுமான நிறுவனம் கட்டுமானப் பணியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இந்திய வீரர்கள் பயிற்சி செய்யும் போது புகைப்படமோ வீடியோவோ, எடுக்கக் கூடாது, பயிற்சியை பார்க்கவே கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக...

இலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தேசிய மக்கள் சக்திக்கு அப்போதைய நாடாளுமன்றத்தில் வெறும் 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். இதனால் எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றுவது கடினம் என்பதால் அதிபராக பதவியேற்ற மறுநாளே நாடாளுமன்றத்தை கலைத்து திசாநாயக்க உத்தரவிட்டார். புதிய நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் 14-ம்...

இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் திப்பு சுல்தானின் வாள் ரூ.3.4 கோடிக்கு ஏலம்

மைசூர் மன்னர் திப்பு சுல்தானுக்கும், ஆங்கிலேய கிழக்கிந்திய படைகளுக்கும் இடையே ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் கடந்த 1799-ம் ஆண்டு நடந்த போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார். இந்த போரில் திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள் ஆங்கிலேயர்களிடம் சிக்கியது. ஸ்ரீரங்கப்பட்டிணம் போரில் ஆங்கிலேய படையின் கேப்டனாக செயல்பட்ட ஜேம்ஸ் ஆண்ட்ரு டிக்என்பவரின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் திப்பு சுல்தானின் வாள் பரிசாக அளிக்கப்பட்டது. அந்த வாளில் புலியின் வரி மற்றும் அரபு மொழியின் ‘ஹா’ என்ற எழுத்தும் பொறிக்கப்பட்டிருந்தது. ‘ஹ’ என்ற எழுத்து திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியை...

ட்ரம்ப் ஆட்சியின் போது 4 ஆண்டு காலமும் அமெரிக்காவில் தங்க விரும்பாதவர்களுக்கு சொகுசு கப்பல் சுற்றுலா

அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் ஜனவரி மாதம், ட்ரம்ப் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வில்லி வீ ரெசிடென்சஸ் எனப்படும் நிறுவனம் ஒரு சொகுசுக் கப்பல் சுற்றுலாத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த சுற்றுப்பயணம் ஓராண்டு முதல் 4 ஆண்டு கால அளவைக்கொண்டதாக இருக்கும். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க இருக்கும் ட்ரம்ப்பின் ஆட்சியைத் தவிர்க்க விரும்புபவர்களுக்கு ஏற்றதாக இந்த சொகுசுக்கப்பல் சுற்றுலாத் திட்டம் இருக்கும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அவரது ஆட்சி காலத்தில் அமெரிக்க நாட்டில் இருக்காமல், சொகுசுக் கப்பலிலேயே...

பிரதமர் மோடி 16 முதல் 21-ம் தேதி வரை நைஜீரியா, பிரேசில், கயானாவில் சுற்றுப் பயணம்: ரியோ டி ஜெனிரோ ஜி20 உச்சி மாநாட்டிலும் பங்கேற்கிறார்

நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 16-ம் தேதி அந்நாட்டுக்கு அரசுமுறை பயணமாக செல்கிறார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரியா செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை இவருக்கு கிடைக்கும். இந்த பயணத்தின் போது அங்கு வசிக்கும் இந்தியர்களை அவர் சந்தித்து பேச உள்ளார். 17-ம் தேதி அந்நாட்டு அதிபர் போலா அகமது தினுபுவை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேசவுள்ளார். நைஜீரியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரேசில் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி,...

கர்நாடகாவில் லோக் ஆயுக்தா சோதனை: 8 அரசு அதிகாரிகளிடம் ரூ.23 கோடி சிக்கியது

கர்நாடகாவில் லோக் ஆயுக்தா போலீஸார் 8 அரசு அதிகாரிகளின் வீடுகளில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.22.86 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்க நகைகள், சொத்துக்களின் ஆவணங்கள் சிக்கின. கர்நாடக மாநிலத்தில் அரசு பணியில் உள்ள அரசு அதிகாரிகள் சிலர் ஊழலில் ஈடுபட்டுள்ள‌தாக லோக் ஆயுக்தா போலீஸாருக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் லோக் ஆயுக்தா போலீஸார் நேற்று பெங்களூரு, மங்களூரு, மைசூரு, பெலகாவி, ராம்நகர், ஹாசன், ஹாவேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள 8 அரசு அதிகாரிகளின் வீடுகள், உறவினர்களின் வீடுகள், நெருக்கமானவர்களின் அலுவலகங்கள்...

பிஹாரின் தர்பங்கா நகரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி

பிஹாரின் தர்பங்கா நகரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு உயர்தர சிகிச்சைகள் கிடைப்பதை மேம்படுத்த வேண்டும் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, பிஹாரின் தர்பங்கா நகரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் இதர வளர்ச்சி திட்டங்கள் ரூ.12,100 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இது இப்பகுதியில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும். இதன் மூலம் பிஹாரின் மிதிலா, கோஷி மற்றும் திர்குத் பகுதி மக்கள் பயன்பெறுவதோடு, அருகில் உள்ளபகுதி மக்களும்,...

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் சுற்றுலாவை ஊக்குவிக்க மிக நீளமான ஜிப் லைனில் ராகுல் சாகச பயணம்

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்காக சகோதரி பிரியங்கா காந்திக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த ராகுல் காந்தி, தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வயநாட்டில் சுற்றுலா மேற் கொண்டார். அப்போது அவர் மிக நீளமான ஜிப் லைனில் சாகச பயணம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் கனமழை காரணமாக வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் நீட்சியாக வயநாட்டுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்நிலையில்,...

தெலங்கானா மாநிலத்தில் தடம் புரண்ட சரக்கு ரயில்: 39 ரயில்கள் ரத்து

தெலங்கானா மாநிலம், பெத்தபல்லி மாவட்டம், பெத்தபல்லி-ராமகுண்டம் தடத்தில் ராகவபூர் அருகே நேற்று முன்தினம் இரவு இரும்புகளை ஏற்றி வந்த சரக்கு ரயில் 11 பெட்டிகளுடன் தடம் புரண்டது. வேகமாக சென்ற சரக்கு ரயிலின் பெட்டிகளுக்கிடையே இருந்த லிங்க் அறுந்து போனதால் ஒன்றோடொன்று மோதி பெட்டிகள் தடம் புரண்டன. இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் 3 ரயில்தண்டவாளங்கள் நாசமடைந்தன. இதனால் டெல்லி, சென்னைக்குசெல்லும் ரயில்களின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்துக்கு ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு...

டெல்லியில் தொழிலதிபர்களுக்கு 160 மிரட்டல்கள்: 11 கும்பல்களை தேடி விடிய விடிய சோதனை

டெல்லியில் ரியல் எஸ்டேட், நகைக்கடை, வாகன விற்பனை, இனிப்பு விற்பனை என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்களுக்கு கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்த ஆண்டில் சராசரியாக இருதினங்களுக்கு ஒருவர் என பல கோடி ரூபாய் கேட்டு இந்த மிரட்டல்கள் வருகின்றன. இவர்களில் சிலர் அலுவலகம் அல்லது வீடு முன் துப்பாக்கிகளால் குண்டுமழை பொழிந்தும் மிரட்டப்பட்டுள்ளனர். இது தொடர்பாக டெல்லி காவல் நிலையங்களில் புகார்களும் பதிவாகி உள்ளன. இந்த மிரட்டல்களை டெல்லியின் முக்கிய தாதா கும்பல்கள் அனுப்பியிருப்பதாக கருதப்படுகிறது. கடந்த நவம்பர் 5-ல் ரோஹிணி பகுதியில்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...