Home 2024
Yearly Archives: 2024
இரையுமன்துறை: கடலரிப்பு தடுப்புச் சுவர் பணி பாதிப்பு
தேங்காப்பட்டணம் அருகே இரையுமன்துறை மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகளுக்கு பாறாங்கற்கள் கடற்கரை ஒட்டி போடப்பட்டுள்ள சாலை வழியாக கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த சாலை கரடு முரடாக இருப்பதால் லாரிகள் வரும்போது அதிகபயங்கரமான சத்தம் கேட்டு குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு உயிர்பயத்தை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. எனவே சாலையை சரிவர சீரமைப்பு செய்த பிறகு லாரியில் பாறாங்கல் கொண்டு செல்லவேண்டும் என பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அரையன் தோப்பு...
வனத்தில் மரங்களை வெட்டியதாக யஷ்ஷின் ‘டாக்சிக்’ பட தயாரிப்பாளர் மீது வழக்கு
படப்பிடிப்புக்காக வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டிய புகாரில் ‘டாக்சிக்’ பட தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘கேஜிஎஃப்’ சீரிஸ் படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு யஷ் நடிக்கும் புதிய படத்தை மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘டாக்சிக்’ (TOXIC) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, தாரா சுட்டேரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கே.வி.என் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.சமீபத்தில்தான் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில்,...
எனக்காகக் கதைகள் எழுதப்படுவதில் மகிழ்ச்சி: மிருணாள் தாக்குர்
இந்தி நடிகையான மிருணாள் தாக்குர், ‘சீதாராமம்’ படம் மூல தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். அடுத்து தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள அவர், விரைவில் தமிழில் அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், சமீபகாலமாக தனக்காகக் கதைகள் எழுதப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: சீதாராமம், ஹாய் நன்னா படங்களுக்குப் பிறகு எனக்கு அதிக வாய்ப்புகள் வருகின்றன. இந்தப் படங்கள் என் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது. அதோடு சில அளவுகோல்களையும் வைத்திருக்கிறது. அது எனது பொறுப்பையும் கூட்டியிருக்கிறது. அதனால்...
ரஜினியின் ‘கூலி’ படத்தை மே 1-ல் ரிலீஸ் செய்ய திட்டம்
ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தை மே 1-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025-ம் ஆண்டு வெளியாகவுள்ள படங்களின் வெளியீட்டு தேதிகள் முடிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது ‘கூலி’ படத்தை மே 1-ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறது. இதற்கான அறிவிப்பை தங்களது விநியோகஸ்தர்களுக்கு தெரிவித்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கூலி’. அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து...
நலன் – கார்த்தியின் ‘வா வாத்தியார்’ டீசர் எப்படி? – ஈர்க்கும் கெட்டப், இசை!
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எப்படி? - இந்தப் படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார் கார்த்தி. மொத்த டீசரும், இசையிலேயே நகர்கிறது. ஆனந்த் ராஜுக்கான ‘எம்ஜிஆர்’ கெட்டப், சத்யராஜின் வித்தியாசமான தோற்றம், எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண் என கதாபாத்திரங்கள் கவர்கின்றன. இடையில் நம்பியார் ரெஃபரன்ஸ் வந்து செல்கிறது. கீர்த்தி ஷெட்டி தலையை காட்டி செல்கிறார். முழுக்க முழுக்க கார்த்தியின் நடனத்திலேயே டீசர் முடிகிறது. படத்தின் எந்த அம்சத்தையும்...
‘நல்ல படம் மக்களைக் கண்டிப்பாக சேரும்’ – ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ இயக்குநர் நம்பிக்கை
விமல், கருணாஸ் நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான படம், ‘போகுமிடம் வெகு தூரமில்லை’. மைக்கேல் கே ராஜா இயக்கிய இந்தப் படம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது. ஓடிடி-யில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை அடுத்து, புதிய படத்துக்கான கதை விவாதத்தில் இருக்கிறார், இயக்குநர் மைக்கேல் கே ராஜா.
அவர் கூறும்போது, “ஒரு நல்ல படம் மக்களைக் கண்டிப்பாகப் போய்ச் சேரும் என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணம். படம் வெளியானதுமே பார்த்துவிட்டு திரைத்துறையினர் பலர் பேசினார்கள். நடிகர் விஜய் சேதுபதி, ‘10...
700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப்
76-வது சீனியர் தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள சைக்கிள் ஓடுதளத்தில் நாளை (நவம்பர் 15-ம் தேதி) தொடங்கி வரும் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடருன் 52-வது ஜூனியர், சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளும் இணைத்து நடத்தப்படுகிறது.
இதில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 700 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். சர்வதேச சைக்கிளிங் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த போட்டியை நாளை (15-ம் தேதி) தமிழக...
தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: கால் இறுதியில் பஞ்சாப், தமிழ்நாடு அதிர்ச்சி தோல்வி
ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நாக் அவுட் சுற்றை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பஞ்சாப், மணிப்பூர் அணியுடன் மோதியது. இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
பஞ்சாப் அணி தரப்பில் மணீந்தர் சிங் (18-வது நிமிடம்), ரவ்னீத் சிங் (24 மற்றும் 59-வது நிமிடங்கள்) கோல் அடித்தனர். மணிப்பூர் அணி சார்பில் கேப்டன்...
ஜப்பான் பாட்மிண்டன் தொடர்: 2-வது சுற்றில் பி.வி.சிந்து
ஜப்பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் ஜப்பான் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் புசானன் ஓங்பாம்ருங்பானுடன் மோதினார். 38 நிமிடங்கள் நடைபெற் இந்த ஆட்டத்தில் சிந்து 21-12, 21-8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்சயா சென், 31-ம்...
ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள்: பிராட் ஹாடின் கருத்து
இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணி வீரர்கள் வாகா மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியதாவது: இரு அணியிலும் வேகப்பந்து வீச்சு தாக்குதல் வலுவாக இருப்பதால் டாப் ஆர்டர் பேட்டிங் சரிவை சந்திக்கும் பட்சத்தில் இரு அணிகளின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான...













