Google search engine
Home 2024

Yearly Archives: 2024

அரசு மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்: 45,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்ற இளைஞர் நேற்று முன்தினம் சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இதில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜிக்கு அந்த மருத்துவமனையிலேயே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், மருத்துவர்தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை புறக்கணிப்பதாக அரசு மருத்துவர்கள்...

லாட்டரி மார்ட்டின், ஆதவ் அர்ஜுனாவின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை, கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனாவின் வீடுகள், கார்ப்பரேட் அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்று, வருமானம் ஈட்டியதாக கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், லாட்டரி வியாபாரம் மூலம் முறைகேடாக ரூ.910 கோடி வருவாய்...

திமுக நிர்வாகி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

திமுக இளைஞர் அணி அமைப்பாளர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் முத்துராமன் (32). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக பொறுப்பு வகித்தார். 2018-ல் வள்ளியூர் முப்பிடாதி அம்மன் கோயில் திருவிழாவுக்கு பக்தர்களை வரவேற்று திமுக சார்பில் பதாகை வைத்திருந்தார். இதற்கு தெற்கு வள்ளியூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கவேல் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதம் செய்தார். இதுதொடர்பாக இரு தரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு,...

நெல் கொள்முதலில் கார்ப்பரேட்களை அரசு அனுமதிக்கக் கூடாது: பி.ஆர்.பாண்டியன்

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தலைமை செயலகத்தில் உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் நேற்று கோரிக்கை மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை முடக்கும் நோக்கில், மத்திய அரசின் நுகர்வோர் கூட்டுறவு அமைப்பு மூலம் நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், கார்ப்பரேட்களை நெல் கொள்முதலில் களமிறக்க மறைமுக சதி நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் இதில் தலையிட்டு, உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல்,...

சென்னையில் 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்குகள் எத்தனை? – விவரம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய சென்னை மாநகர போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த அக்.4-ம் தேதி, சென்னை மாநிலக் கல்லூரி மாணவரான திருத்தணியைச் சேர்ந்த சுந்தர், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டார். ரயில்வே பாதுகாப்பு படையினர் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அக்.9 அன்று சுந்தர் மரணம் அடைந்தார். இதுதொடர்பாக...

கருங்கல்: அரசு பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

கிள்ளியூர் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் கருங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. திப்பிரமலை பஞ்சாயத்து தலைவர் புஷ்பலதா, கிள்ளியூர் வட்டார கல்வி அலுவலர் கலாவதி, கருங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசெல்வம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.  இதில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு உதவி உபகரணங்கள், அடையாள அட்டைகள் மற்றும் இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டன. முகாம் ஏற்பாடுகளை வட்டார வள மையம் மேற்பார்வையாளர் ஸ்ரீவித்யா, ஒருங்கிணைப்பாளர் ஜான் பெனட்ராஜ்,...

திருவட்டார்: தொழிலதிபருக்கு  கத்திக் குத்து வக்கீல் கைது

திருவட்டாறு அருகே பயணம் பகுதியை சேர்ந்தவர் சஜி (31) பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். தேமானூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் வக்கீல். சஜிக்கும் ராஜேஷுக்கும் தொழில் சம்பந்தமாக பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் நேற்று (நவம்பர் 12) இரவு சுமார் 8 மணி அளவில் சஜி ஆற்றூர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, ராஜேஷ் திடீரென அங்கு சென்று தகராறு செய்துள்ளார். தனக்கு தரவேண்டிய பணத்தை...

குமரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீர் முகாம்

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் பொதுமக்களின் மனுக்கள் மீது நேரடியாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  இக்கூட்டத்தில், நாகர்கோவில் ஏஎஸ்பி லலித்குமார், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏடிஎஸ்பி சந்திரசேகரன், அனைத்து உட்கோட்ட டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.

தக்கலை: கடைக்காரருக்கு வெட்டு; அண்ணன்-தம்பிக்கு 5 ஆண்டு சிறை

குலசேகரம் அருகே உள்ள பொன்மனை பகுதி பண்டாரவிளையை சேர்ந்தவர் ஆல்பன் என்ற கிறிஸ்துவர். பகுதியில் கோழி இறைச்சி கடை வைத்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு இரண்டு வழக்குகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 6-12-2010 அன்று பைக்கில் ஆல்பன் செல்லும்போது முருகன் மற்றும் அவரது சகோதரர் ரசல்தாஸ் ஆகியோர் அவரை தடுத்து அரிவாளால் வெட்டினர்.  இதில் காயமடைந்த ஆல்பன் குலசேகர அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக குலசேகரம் போலீசார் முருகன் மற்றும்...

இரயுமன்துறை:  பாறாங்கல் பிரச்சனை; பேச்சுவார்த்தை தோல்வி

நித்திரவிளை அருகே இரயுமன்துறை தூண்டில் வளைவு பணிக்கு பாறாங்கல் கொண்டு செல்லும் டாரஸ் லாரிகளை பூத்துறை பகுதியில் சாலையில் கல் போட்டு ஊர் மக்கள் கடந்த நான்கு நாட்களாக தடுத்து நிறுத்தி உள்ளனர்.  இது சம்பந்தமாகவும், இரயுமன்துறை - தூத்தூர் எல்லையில் தாலுகா சர்வேயரால் போடப்பட்ட எல்லைக் கற்களை மர்ம நபர்கள் எடுத்துச் சென்ற சம்பந்தமாகவும் நேற்று பூத்துறை பங்கு பணியாளர் இல்லத்தில் வைத்து கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.  மீன்வளத்துறை உதவி இயக்குனர் செல்வராஜன், நித்திரவிளை எஸ்ஐ வில்சன், மற்றும் பூத்துறை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தமிழ்நாடு தேர்தல் 2026: நாகர்கோவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

நாகர்கோவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள நாகர்கோவில், தமிழக சட்டமன்றத்தின் 230வது தொகுதியாகும். நாகர்கோவில் மாநகராட்சி முழுமையாக இத்தொகுதியில் அடங்கும். வடிவீசுவரம், வடசேரி நீண்டகரை - ஏ, நீண்டகரை - பி, வேம்பனூர்...

கருணாஸ், நிமிஷா சஜயனின் ‘என்ன விலை’

கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்​பில் உரு​வாகி​யுள்ள படம் ‘என்ன விலை’. சஜீவ் பழூர் இயக்​கி​யுள்ள இதில் ஒய்​.ஜி. மகேந்​திரா, பூர்​ணிமா பாக்​ய​ராஜ், மோகன் ராம், லொள்ளு சபா சுவாமி​நாதன், கவி​தாலயா கிருஷ்ணன், தீபா...

பாண்​டி​ராஜ் இயக்​கத்தில் ஜெயராம், ஊர்​வசி

‘தலை​வன் தலை​வி’ படத்​தின் வெற்​றிக்​குப் பிறகு இயக்​குநர் ‘பசங்க’ பாண்​டி​ராஜ் இயக்​கும் படத்​துக்கு ‘பரிமளா அண்ட் கோ’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். ஜெய​ராம், ஊர்​வசி, சந்​தோஷ் சோபன், சஞ்​சனா கிருஷ்ண​மூர்த்​தி, சாண்​டி, அனந்​திகா சனில்​கு​மார்...