Home 2024
Yearly Archives: 2024
வக்பு பெயரில் நில அபகரிப்பை தடுக்க நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஷோபா உறுதி
கொச்சி: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முனம்பம் புறநகர் பகுதியில் சுமார் 600 குடும்பத்தினருக்கு சொந்தமான 404 ஏக்கர் நிலத்துக்கு வக்பு வாரியம் உரிமை கோருவதாகக் கூறப்படுகிறது. இதைக்கண்டித்து அந்த நிலத்தின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே முனம்பம் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை சந்தித்தபின் கூறியதாவது: வக்பு நிலம் என்ற பெயரில் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நிலத்தைப் பறிக்க நில மாபியாக்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டு வரையில் முனம்பம் பகுதி மக்களுக்கு சொந்தமாக இருந்த...
சந்திரபாபு, பவன்கல்யாண் குறித்து விமர்சனம்: நடிகை ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது, அப்போதைய தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் மற்றும் தற்போதைய உள்துறை அமைச்சரான அனிதா மீது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் ஐடி பிரிவினர் அநாகரிகமான பதிவுகளை சமூகவலைதளங்களில் வெளியிட்டதாக புகார்கள் கூறப்பட்டன. இதுதொடர்பாக தற்போது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின்பேரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த 5 ஆண்டுகளாக சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், அனிதா ஆகியோர் குறித்து நடிகை ஸ்ரீ ரெட்டி சமூக வலைதளங்களில் அநாகரிகமான பதிவுகளை...
பாஜக கோஷம் மகாராஷ்டிராவில் செல்லாது: உ.பி. முதல்வர் யோகிக்கு மகா யுதியில் எதிர்ப்பு
ஹரியானாவில் பாஜகவுக்கு வெற்றி தந்த, ‘பிரிந்தால் இழப்பு' எனும் கோஷம் மகாராஷ்டிராவில் செல்லாது என மகா யுதியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 288 தொகுதிகளுக்கு நவம்பர் 20-ல் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஆளும் மகா யுதி கூட்டணிக்கு ஆதரவாக, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் தனது உரையில் ‘பட்டேங்கே தோ கட்டங்கே' (பிரிந்தால் இழப்பு) எனும் கோஷத்தை தவறாமல் எழுப்பி வருகிறார். இந்த கோஷம் உ.பி. முதல்வர் யோகியால், ஹரியானா பேரவை தேர்தலில் முதன்முறையாக எழுப்பப்பட்டது.
பிரதமர்...
டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேர் விடுதலை: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி
டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் உள்பட 9 பேரை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்டவர்கள் 4 வார காலத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சொத்து பிரச்சினையால், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்த பிரபல நரம்பியல் நிபுணரான டாக்டர் சுப்பையா, கடந்த 2013-ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
7 பேருக்கு மரண தண்டனை: இந்தக் கொலை வழக்கில் சுப்பையாவின் உறவினரான...
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று தெரியும்
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் இன்று தெரியும்.இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில், கடந்த 75 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்துவரும் பாரம்பரிய அரசியல் கட்சிகளை மக்கள் புறக்கணித்தனர். தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி பதவியேற்றார். அவரது என்பிபி கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் 3 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இதனால்,...
ஓய்வுபெற்ற முப்படையினரின் குடும்பத்துக்கு 48 மணி நேரத்தில் ஓய்வூதியம்: சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் தகவல்
ஓய்வுபெற்ற முப்படையினரின் குடும்பத்துக்கு, விண்ணப்பித்த 48 மணி நேரத்தில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் `ஸ்பர்ஸ்' திட்டத்தின் கீழ், முப்படை (ராணுவம், கடற்படை, விமானப்படை) ஓய்வூதியதாரர்களுக்கு வருடாந்திர உயிர்ச்சான்று அடையாளம் காணவும், ஓய்வூதியர்களின் குறைகளைத் தீர்க்கவும் நேற்று சிறப்புமுகாம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கலந்துகொண்டார். சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் தலைமை வகித்து பேசியதாவது: முப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள், அவர்களது குடும்பத்தினர் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்தால், உடனடியாக...
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் பெயர்களை நீக்கக்கோரி வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பின்போது இறந்தவர்கள் மற்றும் இடம் மாறியவர்களின் பெயர்களை நீக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரை வீரன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2019-ல் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் டிசம்பருடன் முடிவடைகிறது. இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து...
‘எங்கள் தரப்பு பாதிப்பு பற்றி பேச யாருமே இல்லை’ – மருத்துவரை தாக்கியதால் கைதான விக்னேஷ் உறவினர்கள் ஆதங்கம்
அரசு மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், ‘‘எங்கள் தரப்பு பாதிப்புகளைப் பற்றி பேச யாருமே இல்லையே’’ என்று விக்னேஷ் உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் பாலாஜி நேற்று முன்தினம் காலை விக்னேஷ் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் விக்னேஷின் தாயார் பிரேமாவுக்கு, மருத்துவர் பாலாஜி முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் விக்னேஷ், மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பெருங்களத்தூரில் வசிக்கும் பிரேமாவின்...
சுயகட்டுப்பாடு இல்லாவிட்டால் எதையும் சாதிக்க முடியாது: மாணவர்களுக்கு ஆளுநர் ரவி அறிவுரை
சுயகட்டுப்பாடு இல்லாவிட்டால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது என்று மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை கூறினார்.
"ஆளுநரின் எண்ணித் துணிக" என்ற தலைப்பில், இளம் சாதனையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனைபுரிந்த குழந்தைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து, குழந்தைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: சிறப்பு குழந்தைகள் குறித்து குறைந்த விழிப்புணர்வே உள்ளது. அவர்களின் தேவைகளை நிறைவேற்ற மத்திய, மாநில...
16-வது நிதி ஆணைய குழு வரும் நிலையில் பொருளாதார நிபுணர் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்துக்கு 4 நாள் பயணமாக 16-வது நிதி ஆணைய குழுவினர் வர உள்ள நிலையில், நிதி அமைச்சர் மற்றும் பொருளாதார நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
நிதி ஆயோக்கின் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் 16-வது நிதி ஆணையத்தை மத்திய அரசு கடந்த டிசம்பர் 31-ம் தேதி அமைத்தது. இதில், அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியாகாந்தி கோஷ் ஆகிய 4 உறுப்பினர்கள் உள்ளனர். இக்குழுவினர் வரும் 17-ம் தேதி தமிழகம் வருகின்றனர்....













