Home 2024
Yearly Archives: 2024
களியக்காவிளை: கனரக லாரி மோதி கிறிஸ்தவ போதகர் பலி
களியக்காவிளை அருகே காரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (62). இவர் களியக்காவிளை அருகே பனங்காலை பகுதியில் உள்ள பெந்தேகொஸ்தே சபையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போதகராக இருந்து வந்தார்.
இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் பாறசாலையில் இருந்து களியக்காவிளை நோக்கி வந்து கொண்டிருந்தார். காராளி பகுதியில் வந்தபோது பின்னால் காலியாக வந்த கேரளத்துக்கு கனிமவளம் ஏற்றிச் செல்லும் கனரக லாரி பைக் மீது மோதியது. இதில் போதகர் விஜயன் தூக்கி வீசப்பட்டு லாரியின் சக்கரத்துக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓட்டுநர்...
களியக்காவிளை: செம்மண் கடத்தி வந்த டெம்போ பறிமுதல்
களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் பளுகல் பகுதியில் இன்று (25-ம் தேதி) காலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக டெம்போ ஒன்று வந்தது. நிறுத்தும்படி போலீசார் கை காட்டினர். ஆனால் அந்த டெம்போ நிற்காமல் சென்றது. தொடர்ந்து போலீசார் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று இளஞ்சிறை என்ற பகுதியில் டெம்போவை மடக்கி பிடித்தனர்.
மேலும் தப்பியோட முயன்ற டிரைவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் விசாரணை செய்த போது தேவிகோடு பகுதி ஜியோ ஜார்ஜ்...
கருங்கல்: கடனை திருப்பி கேட்ட கொத்தனார் அடித்து கொலை – கைது
கருங்கல் அருகே பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் சாம் டேனியல் ராஜ் (37). கொத்தனார். இவரிடம் இருந்து பாலூர் பகுதியைச் சேர்ந்த கொத்தனார், சுரேஷ்குமார் (33) என்பவர் 5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்க சாம் டேனியல் ராஜ் என்பவர் சுரேஷ்குமார் வீட்டிற்குச் சென்றுள்ளார். இது சுரேஷ்குமாரின் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
அப்போது ஏற்பட்ட தகராறில் கட்டையால் சாம் டேனியல் தலையில் சுரேஷ்குமார் ஓங்கி அடித்தார். படுகாயம் அடைந்த சாம் டேனியல் குமரி அரசு மருத்துவக்...
மார்த்தாண்டம்: ஐடி நிறுவன ஊழியர் மாயம்..
மார்த்தாண்டம் வடக்கு தெரு பகுதி முள்ளுவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் லாரன்ஸ் (66). முன்னாள் ராணுவவீரர். இவரது மகன் ஷெர்லின் ஜீன்ஸ் (35). ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது வீட்டில் இருந்து வேலை பார்த்து வரும் நிலையில், ஷெர்லின் ஜீன்ஸ் சம்பவ தினம் இரவு அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்றார். அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்ட அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து லாரன்ஸ் தனது மகனை பல இடங்களில் தேடினார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை....
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா இன்று மோதல்: சாம் கான்ஸ்டாஸ் அரைசதம்
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மெல்பர்ன் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து இந்த டெஸ்ட் தொடரில் முன்னிலை பெறப் போவது யார் என்பதில் 2 அணிகளுக்கு இடையேயும் கடும் போட்டி எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு...
தேசிய ரோலர் ஸ்கேட்டிங்: சென்னை சிறுமிக்கு வெண்கலம்
தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற 62-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்ற தமிழக சிறுமி ஆதிரை, 7 முதல் 9 வயது பிரிவினருக்கான ஸ்கேட் போர்ட் பிரிவில் 3-ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ள சிஷ்யா பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வரும் ஆதிரை, பயிற்சியாளர் விஜய் டாமினிக்கிடம் பயிற்சி பெற்று வருகிறார்.
சாதி பாகுபாடு காட்டியதாக புகார்: பெங்களூரு ஐஐஎம் இயக்குநர் 7 பேராசிரியர்கள் மீது வழக்கு
பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) கல்வி நிறுவனத்தில் சாதிய பாகுபாடு தொடர்பான புகாரில் அதன் இயக்குநர் உட்பட 8 பேராசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த ஜனவரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனத்துக்கு வந்தார். அப்போது அங்கு பணிபுரியும் பட்டியலின பேராசிரியர் கோபால் தாஸுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட பேராசிரியர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதினார். அவரது புகாரை விசாரிக்குமாறு குடியரசுத்...
ஒவ்வொரு மாநிலத்திலும் ஏழுமலையான் கோயில்: அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம்
ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் பிஆர். நாயுடு தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் பல முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர், இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு மற்றும் நிர்வாக அதிகாரி சியாமள ராவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏழுமலையான் கோயில்களை ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்க வேண்டும் என்னும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவை ஏற்று குளோபல் எக்ஸ்பான்ஷன் என்ற பெயரில் குழு...
அஜ்மீர் தர்காவுக்கு பிரதமர் மோடி சார்பில் புனித பூப்போர்வை அனுப்ப வேண்டாம்: இந்து சேனா அமைப்பு வலியுறுத்தல்
ராஜஸ்தானின் அஜ்மீர் நகரில் முஸ்லிம்களின் புகழ்பெற்ற காஜா அஜ்மீர் ஷெரீப் தர்கா உள்ளது. இது மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஒவ்வொரு வருடமும் தர்காவின் உருஸ் விழாவுக்கு பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் புனித பூப்போர்வை அனுப்பி வைப்பது வழக்கம்.
இந்தவகையில் அஜ்மீர் தர்காவில் டிசம்பர் 28-ல் நிகழும் உருஸ் விழாவுக்கு பிரதமர் மோடி சார்பில் புனித பூப்போர்வை அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதை பிரதமர் சார்பில் சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜு நேரில் கொண்டு சென்று...
ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழந்த இந்தியரின் உடல் 6 மாதங்களுக்கு பின்பு சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது
ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழந்த இந்தியரின் உடல் 6 மாதங்களுக்கு பின்பு சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டம் பங்கதா கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையா யாதவ் (41). மனைவி 2 மகன்கள் உள்ளனர். ஒரு முகவர் மூலம் வேலை விசா பெற்றுக் கொண்டு ஜனவரி 16-ம் தேதி ரஷ்யாவுக்கு சென்றுள்ளார் கண்ணையா. செயின்ட் பீட்டர்ஸ் ஸ்கொயர் பகுதிக்கு சென்ற அவருக்கு சமையலர் வேலை தருவதாகக் கூறி பயிற்சி கொடுத்துள்ளனர். அதன் பிறகு ரஷ்ய ராணுவத்தில் சேர்த்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து உக்ரைனுடனான...














