உ.பி.யில் 9 ஆண்டுகளில் 17,000 என்கவுன்ட்டர்கள்

0
25

உத்தர பிரதேசத்தில் கடந்த 2017-ல் யோகி ஆதித்​ய​நாத் முதல்​வ​ராகப் பதவி ஏற்​றது முதல் சட்​டம் ஒழுங்​கில், ‘பூஜ்ஜிய சகிப்​புத் ​தன்​மை’ கொள்​கையை கடைபிடித்து வரு​கிறார்.

இதனால், யோகி அரசு கடந்த 9 ஆண்​டு​களில் மாநிலத்​தி​லுள்ள குற்​றங்​கள் மற்​றும் குற்​ற​வாளி​கள் மீது அதிரடி நடவடிக்​கைகளை மேற்​கொண்​டுள்​ளது. இக்​கால​கட்​டத்​தில், 34,253 குற்​ற​வாளி​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். முதல்​வ​ராக யோகி பதவி ஏற்​றது முதல் இன்று வரை உபி காவல்​துறை மொத்​தம் 17,043 என்கவுன்ட்டர்​களை நடத்​தி​யுள்​ளது. இதில் 289 பிரபல ரவுடிகள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டுள்​ளனர்.

மேலும் 11,834 குற்​ற​வாளி​கள் காயமடைந்​துள்​ளனர். இதன் மூலம், உ.பி​.யில் சராசரி​யாக தின​மும் ஐந்து என்​க​வுன்ட்​டர்​கள் நடத்தப்பட்​டுள்ளன. அதேசம​யம், என்​க​வுன்ட்​டர்​களின்போது காவல்​ துறை​யினரில் 18 பேர் வீரமரணம் அடைந்​துள்​ளதுடன், 1,852 பேர் காயமடைந்​துள்​ளனர். அதி​கபட்ச எண்​ணிக்​கையி​லான என்​க​வுன்ட்​டர்​கள் மீரட் மண்​டலத்​தில் பதி​வாகி​யுள்​ளன.

மீரட் மண்​டலக் காவல்​ துறை 4,813 என்​க​வுன்ட்​டர்​களை குற்றவாளி​களுக்கு எதி​ராக மேற்​கொண்​டுள்​ளது. இதில் 8,921 பேர் கைது செய்​யப்​பட்​டதுடன் 3,513 பேர் காயமடைந்​தனர். மேலும், தலைமறை​வாக இருந்த 97 பிரபல குற்​ற​வாளி​கள் சம்பவ இடத்​திலேயே சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். காவல் ​துறை​யினர் இருவர் வீரமரணம் அடைந்​தனர்.

இரண்​டாவது நிலை​யில், வாராணசி மண்​டலத்​தில் 1,292 என்கவுன்ட்​டர்​கள் பதி​வாகி​யுள்​ளன. இதில் 2,426 குற்​ற​வாளி​கள் கைதாகி, 29 குற்​ற​வாளி​கள் கொல்​லப்​பட்​டனர். ஆக்ரா மண்​டலம் என்​க​வுன்ட்​டர்​களின் எண்​ணிக்​கை​யில் மூன்​றாம் இடத்​தில் உள்ளது. இங்கு நடை​பெற்ற 2,494 என்​க​வுன்ட்​டர்​களில் 5,845 குற்றவாளி​கள் கைது செய்​யப்​பட்​டனர். 24 குற்​ற​வாளி​கள் கொல்லப்​பட்​டனர்.

பரேலி மண்​டலத்​தின் 2,222 என்​க​வுன்ட்​டர்​களில் 21 பிரபல குற்றவாளி​கள் கொல்​லப்​பட்​டுள்​ளனர். தலைநக​ரான லக்னோ மண்​டலத்​தின் 971 என்​க​வுன்ட்​டர்​களில் 20 குற்​ற​வாளி​கள் கொல்லப்​பட்​டுள்​ளனர். காஜி​யா​பாத் மண்​டலத்​தில் 789 என்கவுன்ட்​டர்​களில் 18 பேர் கொல்​லப்​பட்​டனர். கான்​பூர் மண்டலத்​தில் 791 என்​க​வுன்ட்​டர்​களில் 12 குற்​ற​வாளி​கள் கொல்லப்​பட்​டுள்​ளனர்.

இந்த என்​க​வுன்ட்​டர்​கள், உ.பி​.யில் குற்​ற​வாளி​கள் மத்​தி​யில் அச்சத்​தை​யும், பொது​ மக்​களிடையே பாது​காப்பு உணர்​வை​யும் ஏற்படுத்தி இருப்​ப​தாகக் கருதப்​படு​கிறது. இதனாலேயே மாநிலத்தின் சட்​டம் ஒழுங்கு நிலை தேசிய அளவிலும் பாராட்டப்பட்டு வரு​வ​தாக​வும் கூறப்​படு​கிறது.

2 தமிழ் ஐபிஎஸ் அதிகாரிகள்…

உ.பி.யின் புலந்த்​ஷெஹர் மாவட்டத்​தில் எஸ்​பி​யாக இருந்த தமிழ​ரான ஜி.​முனி​ராஜ், முதல் என்​க​வுன்ட்​டரைத் தொடங்கி வைத்​திருந்​தார். இதற்​காகவே ‘உ.பி சிங்​கம்’ என அழைக்​கப்​பட்​ட​வர் தற்​போது முரா​தா​பாத் மண்டல டிஐஜி​யாக உள்​ளார். பிறகு, காஜி​யா​பாத் எஸ்​எஸ்​பி​யாக பணியாற்​றியபோதும் முனி​ராஜ், பல என்​க​வுன்ட்​டர்​களை நடத்தி இருந்​தார்.

ஜி.​முனி​ராஜ் |​ பி.​தினேஷ்கு​மார்

இவரைப் போலவே மற்​றொரு தமிழ​ரான பி.​தினேஷ்கு​மார் ஐபிஎஸ் அதி​காரி​யும் பல என்​க​வுன்ட்​டர்​களை நடத்தி இருந்​தார். இவர், கான்​பூர் எஸ்​எஸ்​பி​யாக இருந்தபோது விகாஸ் துபே எனும் பிரபலக் குற்​ற​வாளி தன்​னைக் கைது செய்ய வந்த போலீஸார் படை​யில் 8 பேரை சுட்​டுக் கொன்​றார். பின்​னர் விகாஸ் துபேவை தினேஷ் கு​மார் என்​க​வுன்ட்​டரில் சுட்​டுக் கொன்​றார்.

இதற்கு முன்​பாக ஷாம்​லி​யின் எஸ்.​பி​யாக இருந்த தினேஷ்கு​மார், காலிஸ்​தான் தீவிர​வா​தி​கள் மூவரை உயிருடன் கைது செய்திருந்தார். இது​போன்ற வீர தீர செயல்​களுக்​காக தமிழர்களான ஜி.​முனி​ராஜ் மற்​றும்​ பி.​தினேஷ்கு​மாருக்​கு குடியரசு தலை​வர்​ விருதுகளை வழங்​கி உ.பி அரசு கவுர​வித்​தது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here