காஞ்சிபுரம் மாவட்டத்தில் அக்டோபரில் 16 பேர் உயிரிழப்பு

0
23

சாலை விபத்து உயி​ரிழப்​பு​களை குறைக்க, பல்​வேறு துறைகளின் ஒருங்​கிணைப்பு தொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் காஞ்​சிபுரத்​தில் நடை​பெற்​றது.

சட்​டம் ஒழுங்கு, சாலைப் பாது​காப்பு மற்​றும் பல்​வேறு துறைகளின் ஒருங்​கிணைப்​புப் பணிகள் தொடர்​பான மாதாந்​திர ஆய்​வுக்கூட்​டம் காஞ்​சிபுரம் ஆட்சி​யர் தி.சினேகா தலை​மையில் நேற்று நடை​பெற்​றது.

இக்​கூட்​டத்​தில் வாலாஜாபாத் வட்​டம் வல்​லப்​பாக்​கம் கிராமத்​தில் சுரங்​கப்​பாதை அமைக்​கப்​படுவ​தால் சுரங்​கப்​பாதையை ஒட்டி மாற்​றுப்​பாதை அமைப்​பது குறித்து விவாதிக்​கப்​பட்​டது. ஒரகடம் அருகே வாரணவாசி தொழில் வளாகத்​தில் புதிய தொழிற்​சாலைகளுக்​கான கட்​டு​மானப் பணிகள் நடை​பெறு​வ​தால், கனரக வாக​னங்​கள் வாரணவாசி முதல் தென்​னேரி அகரம் வரையி​லான குறுகிய கிராமச் சாலை​யைப் பயன்​படுத்து​கின்​றன. இத​னால் பொது​மக்​கள் பாதிக்​கப்​படுவதுடன் அடிக்​கடி விபத்​துகளும் ஏற்​படுவ​தாகக் கூட்​டத்​தில் தெரி​விக்​கப்​பட்​டது.

மேலும் காஞ்​சிபுரம் மாநக​ராட்சி மற்​றும் ஸ்ரீபெரும்​புதூர் நக​ராட்​சிப் பகுதி​களில் சேதமடைந்த சாலைகள், சென்னை – பெங்​களூரு தேசிய நெடுஞ்​சாலை​யில் ஸ்ரீபெரும்​புதூர் பகுதி​யில் சுற்​றித்​தி​ரியும் மாடுகளால் ஏற்​படும் இடையூறுகள், தண்​டலம் – கீவளூர் சாலை, பெரும்​புதூர் – குன்​றத்​தூர் சாலை ஆகிய​வற்​றில் உள்ள பழுதுகள் குறித்​தும் விவாதிக்​கப்​பட்​டது. உத்​திரமேரூர் வட்​டம் நையாண்​டிபாக்​கம் – இளை​யனார் வேலூர் சாலை​யில் செய்​யாற்​றின் குறுக்கே அமைக்​கப்​பட்டுவரும் பாலப் பணிகளை விரைந்துமுடிப்​பது குறித்​தும் ஆலோ​சிக்​கப்​பட்​டது.

விபத்து புள்​ளி​ விவரங்​கள்: இந்​தக் கூட்​டத்​தில் சாலை விபத்​துகள் தொடர்​பான புள்ளி விவரங்​கள் குறித்​தும் தெரி​விக்​கப்​பட்​டது. மாவட்​டத்​தில் கடந்த செப்​டம்​பர் மாதத்​தில் 373 விபத்​துகளும், அக்​டோபர் மாதத்​தில் 342 விபத்​துகளும் நிகழ்ந்​துள்​ளன.அக்​டோபர் மாத விபத்​துகளில் 16 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். கடந்த மாதத்​துடன் ஒப்​பிடுகை​யில்,அக்​டோபரில் விபத்​துகளின் எண்​ணிக்கை குறைந்​துள்​ளதுடன், விபத்​தில் சிக்​கிய​வர்​களை விரைவாக மருத்​து​வ​மனைக்​குக் கொண்டு சேர்ப்​ப​திலும் முன்​னேற்​றம் ஏற்​பட்​டுள்​ள​தாக மருத்​து​வப்பணிகள் இணை இயக்​குநர் தெரி​வித்​தார்.

இக்​கூட்​டத்​தில் மாவட்ட காவல்கண்​காணிப்​பாளர் செ.அர​விந்த்,மாவட்ட வரு​வாய் அலு​வலர் திவ்யஸ்ரீ, கூடுதல் ஆட்சி​யர் ஆஷிக் அலி, சார் ஆட்சி​யர் தி.புவனேஷ் ராம் உள்​ளிட்ட அலு​வலர்கள் பங்கேற்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here