ஏமன் சென்ற படகு கவிழ்ந்ததில் 109 அகதிகள் உயிரிழப்பு: மாய​மான 116 பேரை தேடும் பணி தீவிரம்

0
25

ஏமன் நாட்டை நோக்​கிச் சென்ற அகதிகள் படகு ஜிபூட்டி கடற்​கரை அருகே கவிழ்ந்த விபத்​தில், 15 குழந்​தைகள் உட்பட 109 பேர் உயி​ரிழந்​தனர். மேலும் காணா​மல் போன 116 பேரைத் தேடும் பணி தீவிர​மாக நடை​பெற்று வரு​வ​தாக அனைத்து சர்வதேச அகதி​கள் அமைப்​பான ஐஓஎம் நேற்று தெரி​வித்​துள்​ளது.

சுமார் 350 பேருடன் சென்ற அந்​தப் படகு அக்​டோபர் 8 மற்​றும் 9 ஆகிய தேதி​களுக்கு இடைப்​பட்ட இரவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஜிபூட்டி நாட்​டின் துறை​முக நகரான ஒபோக்​கிற்கு வடக்கே உள்ள குஹெரே பகுதிக்கு அரு​கில் இந்​தத் துயரச் சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது.

இந்த விபத்​தில் 80 பேருக்​கும் அதி​க​மானோர் உயிர் பிழைத்துள்ளனர். உயிர் பிழைத்த அனை​வரும் எத்​தி​யோப்​பிய நாட்​டைச் சேர்ந்​தவர்​கள். விபத்துக்கான காரணங்கள் உடனடியாகத் தெரியவில்​லை.

எத்​தி​யோப்​பிய அரசுத் தரப்​பிலிருந்தும் தகவல் வெளியிடப்படவில்​லை. ஆப்​பிரிக்கா மற்​றும் மத்​திய கிழக்கு நாடு​களுக்கு இடையே ஆபத்​தான கடல் வழிகளில் அகதி​கள் பயணம் செய்​யும்​போது இது​போன்ற கோர விபத்​துகள் தொடர்ந்து அதி​கரித்து வரு​வது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here