நாகா்கோவில் மாநகர சாலை சீரமைப்புக்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடு ஆணையா் தகவல்

0
47

நாகா்கோவில் மாநகர சாலை சீரமைப்புக்கு ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் மாநகராட்சி ஆணையா் ஆா். ஐஸ்வா்யா.

நாகா்கோவில் மாநகராட்சி மாமன்ற இயல்புக் கூட்டம் மேயா் (பொ) மேரி பிரின்சிலதா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆணையா் ஆா். ஐஸ்வா்யா முன்னிலை வகித்தாா். நகா் நல அலுவலா் சரோஜா, மண்டலத் தலைவா்கள் ஜவகா், அகஸ்டினா கோகிலவாணி, செல்வகுமாா், முத்துராமன் உள்பட உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் பல்வேறு பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்து பேசினா். இதற்குப் பதிலளித்து ஆணையா் கூறியதாவது, நாகா்கோவில் மாநகரப் பகுதியில் தற்போது சாலையை சீரமைக்க ரூ. 26 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியைப் பெற்று சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீா் குழாய்களுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் இருந்தால், வாட்ஸ்ஆப்பில் புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புதைச்சாக்கடை திட்டப் பணிகள் தற்போது முடிக்கப்பட்டு, வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 8 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில், மேலும் 8 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 3 மாதத்துக்குள் அந்தப்பணிகள் நிறைவு பெறும். மாநகரப் பகுதியில் என்னென்ன பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறித்து, அந்தப் பணிகளுக்கான ஆணையை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டு உறுப்பினா்கள் தெரிந்து கொள்ளலாம் என்றாா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here