தூய சவேரியார் பொறியியல் கல்லூரியில் கல்வி கடன் ஒப்பந்தம்

0
62

சுங்கான் கடை தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எளிதாக கல்வி கடன் பெறுவதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தின் முதன்மை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் மூலம் இக்கல்லூரியில் பொறியியல் கல்வி படிக்கும் மாணவ மாணவர்கள் அந்தந்த வங்கி கிளையில் எளிதாக கல்வி கடன் பெற முடியும். இந்த ஒப்பந்தத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கன்னியாகுமரி மாவட்ட மண்டல அலுவலக தலைமை மேலாளர் சண்முகசுந்தரம் பாண்டியன், தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியின் தாளாளர் ஆர்ப்பணியாளர் காட்வின் செல்வ ஜஸ்டஸ் கையெழுத்திட்டனர்.

இதில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி ஐஓபி கிளையின் மூத்த மேலாளர் மகேந்திரன், மண்டல அலுவலக மார்க்கெட்டிங் மேலாளர் ஹெரால்டு மோகன்தாஸ், தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி நிதி நிர்வாகி அருட்பணியாளர் சேவியர் ராஜு உட்பட பலர் கலந்து கொண்டனர்.