காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “உத்தர பிரதேசத்தின் மகராஜ்கன்ஜ், பன்சி, மீரட், முசாபர்நகர் ஆகிய மாவட்டங்களின் தேர்தல் அலுவலர்களுக்கு தொலைபேசி வாயிலாக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் இதுபோன்ற ஜனநாயக இடையூறை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 150 மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசியில் மிரட்டுவதாக ஏற்கெனவே ஜெய்ராம் ரமேஷ் புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.