படந்தாலுமுடு கிராமத்தை சார்ந்தவர் செல்லையன் (76). இவர் கூலிவேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் ஜூன் 16-ம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மினி லாரி மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவரை அப்பகுதியினர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று, அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














