சாலையில் தடுப்பில் மோதி இளைஞர் பலி

0
53

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கொல்லகுடிமுக்கில் வசிக்கும் சீனு (27) என்பவர், நேற்று இருசக்கர வாகனத்தில் குமாரபுரம் பட்டன்விளை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோர தடுப்பில் மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். இதில் அவரது நெற்றிப் பகுதியில் பலத்த காயமடைந்த அவரை, தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கும் போது அவர் உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here