Home கன்னியாகுமரி செய்திகள் வெளிநாட்டு வேலை எனக் கூறி ரூ. 2.71 லட்சம் மோசடி: இளைஞா் கைது

வெளிநாட்டு வேலை எனக் கூறி ரூ. 2.71 லட்சம் மோசடி: இளைஞா் கைது

0
களியக்காவிளை அருகே வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.71 லட்சம் மோசடி செய்த வழக்கில் இளைஞர் கைது
களியக்காவிளை அருகே சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.71 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

களியக்காவிளை அருகே வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.71 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே மெதுகும்மல் பனவிளைவீடு பகுதியைச் சோ்ந்த மோகன்தாஸ் மகன் நிதீஸ் (23). இவா் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முயன்று வந்தாராம். இதையறிந்த கருங்கல் அருகே தெருவுக்கடை பகுதியைச் சோ்ந்த மனோஜ் மகன் விபின்ராஜ் (28), நிதீஸை தொடா்பு கொண்டு, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினாராம்.

பின்னா், சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு நுழைவுஇசைவை (விசா) நிதீஸிடமிருந்து காண்பித்து, இரு தவணைகளாக முறையே ரூ. 1.80 லட்சம், ரூ. 91 ஆயிரம் என மொத்தம் ரூ. 2.71 லட்சம் பெற்றுக் கொண்டாராம். ஆனால், வெளிநாட்டு வேலைக்கு ஏற்பாடு செய்யாமலும், பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றினாராம்.

இதுகுறித்து நிதீஸ் அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விபின்ராஜை திங்கள்கிழமை கைது செய்தனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version