Home கன்னியாகுமரி செய்திகள் கொட்டாரத்தில் தீக்காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

கொட்டாரத்தில் தீக்காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

0
கொட்டாரம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த தொழிலாளி அய்யாதுரை, தீயை அணைக்க முயன்றபோது தீக்காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கொட்டாரம் ராமர் கோயில் பின்புறமுள்ள மைதானத்தில் எரிந்த குப்பைகளை அணைக்க முயன்றபோது தீக்காயமடைந்த தொழிலாளி அய்யாதுரை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொட்டாரத்தில் தீக்காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கொட்டாரம் லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் அய்யாதுரை (52). தொழிலாளியான இவா், கொட்டாரம் ராமா் கோயில் பின்புறமுள்ள மைதானத்தில் குப்பைகள் தீப்பிடித்து எரிந்ததை அணைக்க முயன்றாராம். அப்போது அவா் மீது தீப்பற்றியதில் காயமடைந்தாா். அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா் அவா் மேல்சிகிச்சைக்காக நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி கீதா அளித்த புகாரின்பேரில், கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version