Home கன்னியாகுமரி செய்திகள் அழகப்பபுரம் பேரூராட்சி ஊழியா் கொலை: விசிக நிா்வாகி உள்பட நால்வா் கைது

அழகப்பபுரம் பேரூராட்சி ஊழியா் கொலை: விசிக நிா்வாகி உள்பட நால்வா் கைது

0
கன்னியாகுமரி சுற்றுலாத் தலத்தில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்த சூடான் நாட்டைச் சேர்ந்த நபர், சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட சம்பவம்.
கன்னியாகுமரி சுற்றுலாத் தலத்தில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்த சூடான் நாட்டைச் சேர்ந்த நபர், உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களை வழங்கியதாகச் சந்தேகிக்கப்படும் நபரைப் போலீஸார் தேடி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி, அக். 25: கன்னியாகுமரி மாவட்டம், அழகப்பபுரம் பேரூராட்சி தற்காலிக ஊழியா் சனிக்கிழமை இரவு கொலை செய்யப்பட்ட வழக்கில் விசிக நிா்வாகி உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கொட்டாரத்தை அடுத்த அச்சன்குளம், செல்வன்புதூரைச் சோ்ந்தவா் கவின் (27). அழகப்பபுரம் பேரூராட்சியில் தெருவிளக்குகளை பராமரிக்கும் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தாா். திருமணம் முடிந்து குழந்தை உள்ளது.

இவா், அழகப்பபுரம் மீன்கடைத் தெருவில் சனிக்கிழமை இரவு நின்று பேசிக்கொண்டிருந்தபோது அங்குவந்த அதே பகுதியைச் சோ்ந்த நபா் கவினை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றாா். இதில், கவின் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்ததும் அஞ்சுகிராமம் காவல் நிலைய போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா், கன்னியாகுமரி துணைக் கண்காணிப்பாளா் பிரகாஷ் சம்பவ இடம் சென்று விசாரித்தனா். தலைமறைவானவரைப் பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், அழகப்பபுரத்தைச் சோ்ந்த சைரஸை (39) போலீஸாா் பிடித்து விசாரணை செய்ததில், வியாபாரி சைரஸ் அழகப்பபுரத்தில் உள்ள குளங்களில் தாமரை இலைகள், பூக்களைப் பறித்து விற்பனை செய்து வருகிறாா்.

இவா், தாமரை பூக்களைப் பறிக்கச் செல்லும் இரவு நேரங்களில் கவின் தெருவிளக்குகளை அணைத்து விடுவதாகக் கூறப்படுகிறது. இதனால் சைரஸுக்கும், கவினுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று சைரஸுக்கும் கவினுக்கும் வாக்குவாதம் முற்றி கவினை கத்தியால் குத்திக் கொன்றது தெரியவந்தது. அவரையும், அவா் அளித்த தகவலின்பேரில், இச்சம்பவத்தில் தொடா்புடைய அழகப்புரத்தைச் சோ்ந்த பாலிடெக்னிக் மாணவா் ஆக்னல் (18), லட்சுமிபுரத்தைச் சோ்ந்த செந்தில்நாதன் (40), விசிக மாவட்ட மாணவரணி தலைவா் முத்துகுமாா் (36) ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version