Home கன்னியாகுமரி செய்திகள் கருங்கல் அருகே மனைவி 2 மகள்களை வெட்டிவிட்டு தொழிலாளி தற்கொலை

கருங்கல் அருகே மனைவி 2 மகள்களை வெட்டிவிட்டு தொழிலாளி தற்கொலை

0

கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியை சேர்ந்தவர் செல்லசாமி (65) தொழிலாளி. இவருக்கு விமலா ராணி (57) என்ற மனைவி, எமி பென்சியா (27), எமி வினிலா (22) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் வசித்த பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்ட தொடங்கியுள்ளனர். போதிய பண வசதி இல்லலாததால் வீடு கட்டும் பணி  பாதியில் நின்றதாக தெரிகிறது. இது தொடர்பாக செல்ல சாமி மற்றும் குடும்பத்தினர் மன உளைச்சலில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஆக.,29) இரவு 10 மணி அளவில் அரிவாளால் மனைவி மற்றும்  இரண்டு மகள்களை திடீரென செல்ல சாமி வெட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த 3 பேரும் வெட்டுக்காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடினார். அதன் பின்னர் செல்லசாமி மண்ணெண்ணெய் தனது உடலில் ஊற்றி வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். உடல் கருகி அவர் பிணமாக கிடந்தார்.

இது குறித்த தகவல் பேரில் கருங்கல் போலீசார் வெட்டுக்காயம் அடைந்த விமலாராணி, எமி பென்சியா, எமி வினிலா ஆகியவரை கருங்கல் அரசு ஆஸ்பத்திரியில்  சிகிச்சைக்கு  சேர்த்தனர்.  செல்லசாமி உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, இந்த சம்பவத்தில் வேறு காரணம் உண்டா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version