
நகர பசுமையாக்கும் (Urban Greening) திட்டத்தின் கீழ், நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பூங்காக்கள், சாலையோரங்கள் மற்றும் அரசு பள்ளி வளாகங்களில் மாநகராட்சி சார்பில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு, தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நாகர்கோவில் மாநகரின் நுழைவு வாயிலான சுங்கான்கடை பகுதியில் சாலையோரங்களில் Pink Trumpet மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் மரியாதைக்குரிய ஐஸ்வர்யா IAS அவர்கள் கலந்து கொண்டு, Pink Trumpet மரக்கன்றுகளை நட்டு வைத்து, பசுமை பரப்பை அதிகரிக்கும் மாநகராட்சியின் முயற்சிகளை தொடங்கி வைத்தார். நாகர்கோவில் மாநகரை பசுமையான, தூய்மையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாநகரமாக மாற்றும் வகையில், இதுபோன்ற பசுமை வளர்ப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.